இந்தியாவில் கொரோனா பாதிப்பு – இது வரையில்  2,83,248 பேர் பலி

271 Views

கொரோனா 2வது அலை இந்தியாவை கடுமையான நெருக்கடிக்கு உள்ளாக்கியுள்ளது.

கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக2,67,334 பேருக்குக்  கொரோனா  தொற்று உறுதியாகியுள்ள அதே நேரம் 2,54,96,330 பேர் இதுவரையில் பாதிக்கப்பட்டுள்ளனர்.

கொரோனா பாதிப்பால் இது வரையில்  2,83,248 பேர் உயிரிழந்துள்ளனர்.

இந்நிலையில், தொடர்ந்து 13 வார காலத்திற்கும் மேலாக கொரோனா வைரஸ் தொற்றுக்கு ஆளாவோரின் எண்ணிக்கை அதிகரித்து வந்த சுமார் 200 இந்திய மாவட்டங்களில், கடந்த இரண்டு வார காலமாக தொற்றுக்கு உள்ளாகும் நபர்களின் எண்ணிக்கை குறைந்துள்ளது என்று இந்திய அரசு தெரிவித்துள்ளது.

பரிசோதனை செய்யப்படுபவர்களுள் தொற்று இருப்பது உறுதிசெய்யப்படுபர்களின் விகிதமும் குறைந்து வருவதாக இந்திய கோவிட்-19 நடவடிக்கை குழுவின் தலைவர் மருத்துவர் வி.கே. பால் தெரிவித்துள்ளார்.

Leave a Reply