இந்தியாவில் காணப்பட்ட வைரஸ் 53 நாடுகளில் பரவல்-  WHO

114 Views

‘புதிய உருமாறிய பி.1.617 கொரோனா வைரஸ் வகை முதலில் இந்தியாவில் கண்டறியப்பட்டது. இந்த வகை கொரோனா இப்போது 53 நாடுகளில் பரவி இருக்கிறது. இந்த பி.1.617.1, வைரஸ் வகை இப்போது பி.1.617.2 மற்றும் பி.1.617.3 என்ற மூன்று உருமாற்றங்களை அடைந்துள்ளது’ என உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.

மேலும்  பி.1.617.1 வகை கொரோனா 41 நாடுகளில் காணப்படுகிறது. பி.1.617.2 வகை கொரோனா 54 நாடுகளிலும், பி.1.617.3 வகை கொரோனா 6 நாடுகளிலும் காணப்படுகிறது.

பி.1.617 கொரோனா வகையை உலக சுகாதார அமைப்பு கவலைக்குரிய வகை என்ற பட்டியலில் சேர்த்துள்ளது. இந்த வகை கொரோனா வைரஸ் வேகமாக பரவக் கூடியது என்றும், அதன் நோய் தாக்கமும், மறுபாதிப்பு அபாயம் குறித்த விவரங்கள் ஆய்வில் இருப்பதாக உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.

Leave a Reply