இந்தியாவில் கண்டறியப்பட்ட கொரோனா திரிபுகள் – WHO கவலை

172 Views

இந்தியாவில் கண்டறியப்பட்ட கொரோனா திரிபுகளில் ஒன்றுதான் மிகவும் கவலை தரும் பிரச்னையாக உள்ளது என்று உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.

இதுவரை இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை  2,83,07,832 உள்ளது. அது நேரம்   உயிரிழப்புகள் 3,35,102 ஆக பதிவாகியுள்ளது.

இந்நிலையில், இந்தியாவில் இதுவரை மூன்று புதிய திரிபுகள் கண்டறியப்பட்டுள்ளன. அவற்றில் B.1.617 என்ற வகை வைரஸ்தான் நாட்டில் இரண்டாம் அலை தீவிரம் அடைய காரணம் என்று கண்டறியப்பட்டுள்ளது.

அந்த ஒரு திரிபுதான் மூன்றாக பிரிந்து மேலும் தாக்கத்தை ஏற்படுத்தி வருவதாக உலக சுகாதார ஆய்வாளர்கள் கருதுகின்றனர். இவை அதிவேகமாக பரவும் தன்மை கொண்டவை. மேலும் தடுப்பூசி மருந்துகளில் இருந்து நோயாளியை பாதுகாக்கும் சாத்தியமும் குறைவாக உள்ளதாக ஆய்வாளர்கள் நம்புகின்றனர்.

இந்த திரிபு பரவும்போது அது மிகப்பெரிய அளவில் பொது சுகாதாரத்துக்கு ஆபத்தாக மாறும் என்று உலக சுகாதார அமைப்பின் தொற்று நோய் பரவல் தடுப்புப் பிரிவின் வாராந்திர செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

இந்த வகை திரிபு மீதான மேலதிக ஆய்வுக்கு முன்னுரிமை கொடுத்து வருவதாக உலக சுகாதார அமைப்பு கூறியுள்ளது.

Leave a Reply