இந்தியாவில் அதிகரிக்கும் கொரோனா தொற்று- எல்லைகளை மூடியது நியூசிலாந்து

இந்தியாவில் கொரோனா தொற்று அதிகரித்து வரும் நிலையில் இந்தியாவில் இருந்து வரும் பயணிகளுக்கு ( தங்கள் குடிமக்கள் உட்பட) நியூசிலாந்து 14 நாட்களுக்கு தற்காலிக  பயணத் தடை விதித்துள்ளது.

இந்தியாவில் இருந்து வரும் நியூசிலாந்து நாட்டவர்களுக்கும் இந்தத் தடை பொருந்தும் என நியூசிலாந்து பிரதமர் ஜெசிந்தா ஆர்டெர்ன் அறிவித்துள்ளார்.

நியூசிலாந்தில் இன்று   23 புதிய கோவிட் 19 தொற்று நோயாளர்கள்  கணடறியப்பட்டுள்ளனர். இவா்களில் 17 பேர் இந்திய பயணிகள், இதனையடுத்தே இந்தியாவில் இருந்து வருவோருக்கான பயணத் தடை அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த இடைக்காலத் தடை 11 ஆம் திகதி முதல் ஏப்ரல் 28-ஆம் திகதிவரை அமுலில் இருக்கும் என்றும் இந்தக் காலப்பகுதிக்குள் நிலைமையக் கருத்தில் கொண்டே அடுத்த கட்ட நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் நியூசிலாந்து பிரதமர் ஜெசிந்தா ஆர்டெர்ன் தெரிவித்துள்ளார்.

நியூசிலாந்தில் 2,555 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளதுடன் 26 பேர் இது வரையில் மரணம் அடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.