இந்தியாவின் பெரு நகரங்களில் இருந்து சிறு நகரங்களுக்கு விரிவடைந்த பெருந்தொற்று

178 Views

இந்தியாவின் டெல்லி, மும்பை, லக்னெள, புனே போன்ற பெரிய நகரங்களில் பேரழிவு தாக்கத்தை ஏற்படுத்தி வரும் கொரோனா வைரஸ்,  தற்போது பல சிறிய நகரங்கள் மற்றும் கிராமங்களுக்கும் விரிவடைந்துள்ளது.

”இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 4,01,993 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதன் மூலம்    கொரோனா பாதிப்பு 1,91,64,969 ஆக அதிகரித்துள்ளது.

அதே நேரம் கடந்த 24 மணி நேரத்தில் கொரோனாவில் 3523 பேர் உயிரிழந்துள்ளதைத் தொடர்ந்து இது வரையில் உயிரிழப்பு 2,11,853 ஆக  பதிவாகியுள்ளது.

இந்நிலையில், ராஜஸ்தான் மாநிலத்தின் கோட்டா மாவட்டத்தில் கடந்த வாரத்தில் மட்டும் 6,000க்கும் அதிகமான கொரோனா பாதிப்புகள் பதிவாகியுள்ளன. மேலும் பெருந்தொற்று தொடங்கியதில் இருந்து 264 பேர் இங்கு இறந்துள்ளனர்.

உத்தரபிரதேசம் அலகாபாத் மாவட்டத்தில், ஏப்ரல் 20ஆம் திகதி வரை 54,339 கொரோனா வைரஸ் பாதிப்புகள் பதிவாகியுள்ளதோடு அது மேலும் அதிகரித்து வருவதாக கூறப்படுகின்றது. இங்கு ஏற்பட்ட 614 மரணங்களில் 32% ஏப்ரல் மாதத்தில் மட்டுமே நடந்துள்ளது.

சத்தீஸ்கர் மாநிலம் கபீர்தாம்,இங்கு கடந்த ஏழு நாட்களில் இங்கு கிட்டத்தட்ட 3,000 புதிய பாதிப்புகள் பதிவாகின.

பாகல்பூர் மற்றும் ஒளரங்காபாத் ஆகிய இடங்களில் கிழக்கு மாநிலமான பிகாரில் உள்ள பாகல்பூர் மாவட்டமும் மோசமாக பாதிக்கப்பட்டுள்ளது. ஏப்ரல் 20 முதல் அதன் பாதிப்பு அளவு 26% அதிகமாக இருந்தது. அதே காலகட்டத்தில் இறப்புகளின் எண்ணிக்கை 33% அதிகரித்துள்ளது.

உத்தராகண்ட் மாநிலம் நைனிடால் பகுதியில், இமயமலையில் உள்ள சுற்றுலா மாவட்டமான நைனிடால், அதிகரித்து வரும் பாதிப்புகளை சமாளிக்க போராடி வருகிறது.  கடந்த வாரத்தில் 4,000க்கும் மேற்பட்ட பாதிப்புகளாயின. இங்கு 82 உயிரிழப்புகள் பதிவாகியுள்ளன.

அதே போன்று தமிழகத்தில், கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 11,66,756 ஆக உள்ளது. உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 14,046 ஆக உள்ளது. சென்னையில்   இதுவரை 3,33,804 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

Leave a Reply