நீண்டகாலப் பிரச்சினையான அயோத்தி தீர்ப்பு வெளியானது

இந்தியாவில் நீண்டகாலப் பிரச்சினையாக இருந்து வந்த அயோத்தி
பிரச்சினைக்கு இன்று தீர்ப்பு வழங்கப்பட்டது. இந்த வழக்கை விசாரித்து வரும்
கோகாய் என்ற நீதிபதி 65 வயதை எட்டுவதால், எதிர்வரும் 17ஆம் திகதி ஓய்வு
பெறுகின்றார். அதற்கிடையில் தீர்ப்பு வழங்கப்படும் என்பது அனைத்து
தரப்பினராலும் எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் திடீரென இன்று தீர்ப்பு வெளியாகும்
என்ற செய்தி கிடைக்கப் பெற்றது.

இந்தியா முழுவதுமே பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டது. மதத்தலங்கள், பொது
இடங்கள், இரயில் நிலையங்கள், விமான நிலையங்கள் என எல்லா இடத்திலும்
பாதுகாப்புப் படையினர் குவிக்கப்பட்டு, சோதனைகள் இடம்பெற்றன. பாடசாலைகள்
கல்லூரிகள் மூடப்பட்டன. அயோத்தியில் 144 தடையுத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
அயோத்தி இராமர் பிறந்த நிலம் என்றும், அது இந்துக்களுக்கே சொந்தம்
என்றும், இஸ்லாமியர்களுக்கு அயோத்தியிலேயே மாற்று இடம் வழங்கப்படும்
என்றும் இன்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.

அயோத்தி சர்ச்சைக்குரிய ராமஜென்ம பூமி தொடர்பான மேன்முறையீடு வழக்கு
உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் தலைமையில், நீதிபதிகள் ஷரத்
அர்விந்த் பாப்டே, அசோக் புஷன், சந்திரசூட் மற்றும் அப்துல் நசீர் ஆகிய 5
நீதிபதிகளைக் கொண்ட அரசியல் சாசன அமர்வு விசாரணையை நடத்தியது.
தொடர்ந்து 40 நாட்கள் விசாரணையின் பின்னர் இன்று வரலாற்று சிறப்பு மிக்க
தீர்ப்பை வழங்கியுள்ளது.

5 நீதிபதிகளும் ஒருமனதாக இந்த வரலாற்று சிறப்பு மிக்க தீர்ப்பை
வழங்கியுள்ளனர்.ttt நீண்டகாலப் பிரச்சினையான அயோத்தி தீர்ப்பு வெளியானது

முன்னதாக நீதிபதிகள் அறைக்குள் வந்ததும், தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய்,
அனைவரையும் அமைதியாக இருக்கும்படி கேட்டுக் கொண்டதுன், தீர்ப்பில்
அனைத்து நீதிபதிகளும் கையெழுத்திட்டனர்.

அதைத் தொடர்ந்தே தீர்ப்பு வாசிக்கப்பட்டது. தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய்
தீர்ப்பை வாசித்தார்.
தீர்ப்பின் முக்கிய அம்சங்கள் பின்வருமாறு:

 அயோத்தியில் சர்ச்சைக்குரிய 2.77 ஏக்கர் நிலத்தில் இராமர் கோயில்
கட்டலாம்.
 அந்த இடத்தில் இராமர் கோயில் கட்ட மத்திய அரசு ஒரு அமைப்பை
உருவாக்க வேண்டும். இது 3 மாத காலத்திற்குள் நடைபெற வேண்டும்.
 இஸ்லாமியர் மசூதி கட்டுவதற்காக 5 ஏக்கர் நிலத்தை சன்னி வக்பு
அமைப்பினர் குறிப்பிடும் இடத்தில் அயோத்தியில் வழங்க வேண்டும்.
இதுவும் 3 மாதங்களுக்குள் மத்திய அரசு நிறைவேற்ற வேண்டும்.
 பாபர் மசூதி இருந்த இடம் முழுவதும் தங்களுடையது என்பதை
இஸ்லாமியர்கள் உறுதிப்படுத்தவில்லை
 1992இல் பாபர் மசூதி இடிக்கப்பட்டது உச்ச நீதிமன்றத்தின் உத்தரவை
மீறிய செயல்.
 அலகபாத் நீதிமன்றம் 2010இல் வழங்கிய தீர்ப்பு தவறானது
 சன்னி வக்பு பிரிவினருக்கு எதிராக ஷியா வக்பு பிரிவினர் தொடர்ந்து
வழக்கு தள்ளுபடியாகியுள்ளது.
 ஒரு மதத்தினரின் நம்பிக்கை, மற்ற மத நம்பிக்கையை தடுப்பதாக
இருக்கக்கூடாது.
 நீதிமன்றம் நடுநிலையை காக்கும் பொறுப்பில் இருக்கிறது.
 நிலத்திற்கு உரிமை கோரிய நிர்மோஹி அகாரா மனுவில் ஆதாரங்கள்
இருப்பதாகத் தெரியவில்லை.
 மதச்சார்பின்மையே அரசியல் சாசனத்தின் அடிப்படைப் பண்பு
 அமைதியைக் காக்கவும், பாதுகாப்பை பராமரிக்கும் வகையிலும்,
அயோத்தி தீர்ப்பை ஏற்றுக் கொள்ள வேண்டும்.
 பாபர் மசூதி வெற்று இடத்தில் கட்டப்படவில்லை என்பதை தொல்லியல்
துறையினரின் ஆய்வு வெளிப்படுத்தியுள்ளது.

போன்ற அம்சங்களை நீதிபதி கோகாய் தெரிவித்தார்.
இதேவேளை, இந்த தீர்ப்பை பிரதமர் மோடி உட்பட அனைத்து தரப்பினரும்
ஒருமனதாக ஏற்றுக் கொள்ள வேண்டும் என்று அனைத்து அரசியல்வாதிகளும்
மக்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளனர்.தீர்ப்பு வெளியாகியது முதல் இதுவரை எந்த அசம்பாவிதங்களும் நிகழ்ந்ததாக பதிவாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.