Tamil News
Home உலகச் செய்திகள் இந்தியாவின் தேசிய விலங்காகப் பசுவை அறிவிக்க கோரி பாத யாத்திரை

இந்தியாவின் தேசிய விலங்காகப் பசுவை அறிவிக்க கோரி பாத யாத்திரை

மத்திய அரசு தேசிய விலங்காகப் பசுவை அறிவிக்க வலியுறுத்தி திருப்பதி தேவஸ்தான உறுப்பினர் பாத யாத்திரை செய்யவுள்ளதாக அறிவித்துள்ளார்.

திருமலை திருப்பதி தேவஸ்தானம் (டிடிடி) அறக்கட்டளை அமைப்பின் உறுப்பினராக உள்ள `பசுக் காவலர்’ கே.சிவகுமார், மத்திய அரசு பசுவை தேசிய விலங்காக அறிவிக்க வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி, திருப்பதியில் இருந்து பாத யாத்திரை செல்ல உள்ளதாக அறிவித்துள்ளார்.

இது இவருடைய இரண்டாவது பாத யாத்திரை ஆகும். இதற்கு முன் நவம்பர் 5 முதல் 7 வரை ஹைதராபாத்தில் இருந்து தெலங்கானாவின் யாதத்ரி கோயில் வரை நூற்றுக்கணக்கான பசு ஆர்வலர்களுடன் ‘கோ மஹா பாத யாத்திரை’ நடத்தியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Exit mobile version