Tamil News
Home உலகச் செய்திகள் இந்தியாவின் இரயில் பாதைகளில் இறந்த 8 ஆயிரம் பேர்: பெரும்பாலானோர் புலம்பெயர்ந்த தொழிலாளர்கள்

இந்தியாவின் இரயில் பாதைகளில் இறந்த 8 ஆயிரம் பேர்: பெரும்பாலானோர் புலம்பெயர்ந்த தொழிலாளர்கள்

கொரோனா பெருந்தொற்று சூழலினால் ஏற்பட்ட ஊரடங்கு காரணமாக, இந்தியா முழுவதும் இரயில் சேவைகள் பாதிக்கப்பட்டிருந்த நிலையிலும் 2020ல் 8,700 பேர் இரயில் பாதைகளில் அடிப்பட்டு உயிரிழந்திருக்கின்றனர். இதில் பெரும்பாலானோர் புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் என்ற தகவல் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தக்கூடியதாக இருக்கின்றது.

தகவலறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் மத்திய பிரதேச மாநிலத்தின் செயல்பாட்டாளர் சந்திர சேகர் கவுர் கேட்ட கேள்விகளுக்கு இரயில்வே துறை அளித்துள்ள பதலில் இந்த இறப்பு தகவல் தெரிய வந்துள்ளது.

ஊரடங்கினால் இரயில்கள் எதுவும் இயங்காது என எண்ணியும் சொந்த ஊர்களுக்கு சென்றடைவதற்கான குறுகிய பாதையாக இது இருக்கும் என எண்ணியும் இரயில் பாதைகளில் சென்ற பல புலம்பெயர் தொழிலாளர்கள் உயிரிழந்துள்ளதாகக் கூறப்பட்டுள்ளது.

Exit mobile version