இத்தாலியிலுள்ள இலங்கை துணைத் தூதரகம் மூடல்

244 Views

கொரோனா அச்சம் காரணமாக இத்தாலியின் மிலனிலுள்ள இலங்கை துணைத் தூதரகத்தின் அலுவலகம் எதிர்வரும் 15ஆம் திகதி வரை தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது.

கொரோனா நோயாளர் ஒருவர் அண்மையில் துணைத் தூதரகத்தின் அலுவலகத்திற்கு சென்றது உறுதி செய்யப்பட்டதையடுத்தே குறித்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

அலுவலகத்தை கிருமி நீக்கம் செய்யவும், அனைத்து ஊழியர்களையும் பி.சி.ஆர். சோதனைக்குட்படுத்தவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

தூதரகத்தின் பொது அலுவலகத்தை எப்போது திறப்பது என்பது குறித்த முடிவு  வரும் வாரம் எடுக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply