Tamil News
Home செய்திகள் இணக்­கப்­பா­டு­க­ளின்றி முடிவுற்ற மைத்திரி -ராஜபக்ச பேச்சுவார்த்தை

இணக்­கப்­பா­டு­க­ளின்றி முடிவுற்ற மைத்திரி -ராஜபக்ச பேச்சுவார்த்தை

ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சே­ன­வுக்கும், பொது­ஜன பெர­மு­னவின் தலை­வரும் எதிர்க்­கட்சித்  தலை­வ­ரு­மான மஹிந்த ராஜ­பக்ஷ தலை­மையில் ஜனா­தி­பதி வேட்­பாளர் கோத்­தா­பய ராஜ­பக்ஷ, அக்­கட்­சியின் போசகர் பசில் ராஜ­பக்ஷ ஆகி­யோ­ருக்கும் இடையில் நடை­பெற்ற மிக முக்­கிய சந்­திப்­பொன்று இணக்­கப்­பா­டின்றி நிறை­வுக்கு வந்­துள்­ளது.

ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சே­னவின் இல்­லத்தில் நேற்று நண்­பகல் நடை­பெற்ற இந்தச் சந்­திப்பின் போது ஜனா­தி­பதித் தேர்­தலில் பொது­ஜன பெர­மு­னவும், சுதந்­தி­ரக்­கட்­சியும் கூட்­டி­ணை­வது குறித்து பேச்­சு­வார்த்தை நடத்­தப்­பட்­டது.

இப்­பேச்­சு­வார்த்­தையின்  போது, பொது­ஜன பெர­மு­னவின் போசகர் பசில் ராஜ­பக்ஷ, கடந்த உள்­ளூ­ராட்சி மன்­றங்­க­ளுக்­கான  தேர்­தலில் பொது­ஜன பெர­மு­ன­வுக்கு கிடைத்­துள்ள வாக்­குகள் பற்­றிய சத­வீ­தத்­தினை குறிப்­பிட்­ட­தோடு தற்­போது பொது­ஜன  பெர­மு­ன­வுடன் இணைந்­துள்ள சிறு­பான்மை மற்றும் இடது சாரி தரப்­புக்கள் ஆகி­ய­வற்றின் வாக்கு வங்­கி­யையும் முன்­னி­லைப்­ப­டுத்தி கருத்­துக்­களை வெளி­யிட்­டுள்­ள­தோடு சுதந்­தி­ரக்­கட்சி பொது­ஜ­ன­பெ­ர­மு­ன­வுடன் இணைந்தால் மேலும் பல­மான அணி­யாக உரு­வாகும் என்றும் குறிப்­பிட்­டுள்ளார்.

இச்­ச­ம­யத்தில் ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன, சுதந்­திரக் கட்­சி­யா­னது பாரம்­ப­ரியம் வாய்ந்­த­தாகும். ஆகவே அக்­கட்­சியின் சில தனித்­து­வங்­களை விட்­டுக்­கொ­டுக்க முடி­யாது.குறிப்­பாக ஜனா­தி­பதித் தேர்­தலில் கை அல்­லது வெற்­றிலை இலச்­சி­னையில் கள­மி­றங்­கு­வதே பொருத்­த­மா­ன­தாகும்.

எமது கட்­சியின் அதி­க­மான உறுப்­பி­னர்­களும் இந்த நிலைப்­பாட்­டி­லேயே இருக்­கின்­றார்கள் என்று குறிப்­பிட்­டுள்ளார்.

இதன்­போது, ராஜ­பக்ஷ தரப்பில், இந்த தேர்­தலில் பொது­ஜன பெர­முன தாமரை மொட்டுச் சின்­னத்­தி­லேயே கள­மி­றங்க வேண்­டிய கட்­டா­யத்தில் உள்­ளது. அத்­துடன் இந்த சின்னம் கடந்த உள்­ளூ­ராட்சி மன்றத் தேர்­தலின் பின்னர் இச் சின்னம் மக்­க­ளுக்கு பழக்­கப்­பட்­ட­தாக இருக்­கின்­றது.

ஆகவே ஜனா­தி­பதித் தேர்­தலில் தாம­ரை­மொட்டுச் சின்­னத்­தினை பயன்­ப­டுத்­துவோம். அடுத்த பொதுத்­தேர்­தலில் நாம் கை அல்­லது வெற்­றிலைச் சின்­னத்தில் கள­மி­றங்க முடியும் என்று கூறப்­பட்­டுள்­ளது.

இந்­நி­லையில், ஜனா­தி­பதி மைத்­திரி, அதற்கு மறுப்புத் தெரி­வித்­த­தோடு, ஜனா­தி­பதி வேட்­பா­ள­ராக கள­மி­றக்­கப்­பட்­டுள்ள கோத்­தா­பய ராஜ­பக்ஷ வேண்­டு­மானால் சுதந்­தி­ரக்­கட்­சியின் உறுப்­பு­ரி­மையைப் பெற்று இக்­கட்­சியின் சின்­னத்தில் கள­மி­றங்­கு­வ­தற்கு கூட வாய்ப்­ப­ளிக்க தாம் தயா­ராக இருப்­ப­தாக கூறி­யுள்ளார்.

எனினும், ராஜ­ப­க்ஷ­வி­னரின் தரப்பில் தாம­ரை­மொட்டுச் சின்­னத்­தினை கைவி­டு­வ­தற்கு தயா­ரில்­லாத வகை­யி­லான கருத்­துக்­களே தொடர்ந்தும் முன்­வைக்­கப்­பட்­டன. இதனால் ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால நாளை மறு­தினம்(நாளை) கூட­வுள்ள தனது கட்­சியின் மத்­திய குழு கூட்­டத்தில் உறுப்­பி­னர்­க­ளுடன் கலந்­து­ரை­யா­டி­விட்டு பதி­ல­ளிப்­ப­தாக கூறி­யுள்ளார்.

இந்­நி­லையில் இச்­சந்­திப்­பா­னது இணக்­கப்­பா­டு­க­ளின்றி நிறை­வுக்கு வந்­துள்­ளது.

எனினும் இரு­த­ரப்­பிலும் தொடர்ந்தும் பேச்­சுக்­களை முன்­னெ­டுத்து பரந்து பட்ட கூட்­ட­ணி­யொன்றை அமைக்க வேண்டும் என்ற கொள்கை ரீதி­யான இணக்­கப்­பாடு காணப்­ப­டு­வ­தாக அறிய முடி­கின்­றது.

எனினும் நாளைய தினம் நடை­பெறும் சுதந்­திரக் கட்­சியின் மத்­திய குழு­கூட்­டத்தின் பின்­னரே அடுத்த கட்ட விட­யங்கள் தொடர்பில் தீர்­மா­னிக்­கப்­படும் என்றும் சுதந்­தி­ரக்­கட்­சியை பொறுத்­த­வ­ரையில் ஜனாதிபதி மைத்திரிக்கு அடுத்த ஆட்சியில் எவ்வாறான பதவி வழங்கப்படும் ஏனைய உறுப்பினர்களுக்கு அமைச்சுப்பதவிகள் கிட்டுமா என்ற விடயங்களை விடவும் தற்போது சுதந்திரக் கட்சியின் தனித்துவத்தினை பாதுகாப்பதே அடிப்படைக் குறிக்கோளாக கட்சியின் தலைவர் என்ற வகையில் ஜனாதிபதிக்குள்ளது என்றும்  அக்கட்சியின் பெயர் குறிப்பிட விரும்பாத முக்கியஸ்தர் ஒருவர் வீரகேசரி வாரவெளியீட்டுக்கு தெரிவித்தார்.

Exit mobile version