159, ஆசனங்களை பெற்று ஆட்சிபீடம் ஏறிய தேசிய மக்கள் சக்தி அரசால் ஆச்சரியம் எதுவுமே நடக்கவில்லை பயிலுனர் பாராளுமன்ற உறுப்பினர் களாகவே அவர்களுடைய செயல்பாடுகள் உள்ளது. வடகிழக்கு தமிழர் தாயகத்தை கூறுபோடும் செயல்களே தொடர்கின்றன.
ஊழலை ஒழிக்கின்றோம், பொருளாதாரத்தை கட்டி எழுப்புவோம், குற்றவாளிகளை தண்டிப்போம் என வாக்குறுதி கூறி ஆட்சியை பிடித்த அநுர அரசு தற்போது வடகிழக்கில் தமிழ் மக்களின் வாக்குகளை உள்ளூராட்சி சபை தேர்தலில் கவரும் விதமாக தமது போலி வாக்குறுதிகளை வழங்கி தமிழ்தேசிய அரசியலை சிதைக்கும் திட்டத்தில் ஈடுபடுவதை காணமுடிகிறது.
ஈஷ்டர் குண்டு தாக்குதலில் பிரதான சூத்திரதாரியை கடந்த ஏப்ரல் 21, க்கு முன்னர் கைது செய்வதாக ஜனாதிபதி அநுரா கூறினார். ஆனால் 2006ல் கிழக்கு பல்கலைக்கழக விவ சாயபீட பேராசிரியர் ரவிந்திரநாத்தின் கடத்தல் கொலையின் சந்தேக நபராக பிள்ளையான் கைதுசெய்யப் பட்டார் என்பதே அவரை கைது செய்த பின்னர் பொலி சாரால் வழங்கப்பட்ட தகவல்.
அதன்பின்னர் வேறு எவரையும் இதுவரை கைதுசெய்யாமல் பிள்ளையானை காட்சிப்பொருளாக வைத்து ஈஷ்டர் குண்டு தாக்குதலுக்கான காரண கர்த்தாவாக அவரையே காட்டப்பட்டுவருவதையே காணமுடிகிறது.
ஈஷ்டர் குண்டுத்தாக்குதலின் பிரதான சந்தேக நபர்கள் எவருமே இதுவரை கைதுசெய்யப்படவில்லை, பல ஊழல் வாதிகளாக கடந்த காலங்களில் செயல்பட்டதாக ஜனாதிபதி தேர்தலுக்கு முன்னர் பல கோவைகளை அடுக்கிவைத்து பொது மண்டபத்தில் கூட்டம்போட்டு காண்பித்த எந்த ஒரு பெருச் சாளிகளுக்கும் எதிராக இதுவரை நடவடிக்கை எடுக்க வில்லை.
வடகிழக்கிலும் பல ஊழல்களுக்கு துணைபோன பலர் உள்ளனர் என தேசிய மக்கள் சக்தி பாராளுமன்ற உறுப்பினர்கள் மேடைக்கு மேடை பேசினார்கள். பிள்ளையானை தவிர வேறு எவருமே கைதாகவில்லை. எல்லோருமே சுதந்திரமாக நடமாடுகின்றனர்.
வாய்ச்சொல்லின் வீரர்களாகவும் செயல்களில் மந்தமாகவுமே கடந்த ஆறுமாதங்களாக ஆட்சி தொடர்கிறது.
ஆனால் அரசியல் தீர்வு, அரசியல் யாப்பு திருத்தம், பயங்கரவாத தடைச்சட்டம் நீக்கல், அரசியல் கைதிகள் விடுதலை தொடர்பாக எந்த முன்னேற்றமும் காட்டாமல் வடகிழக்கு தமிழ்மக்களும் தமது தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் பின்னால் உள்ளனர் என்பதை சர்வதேசத்துக்கு காட்டும் நோக்கில் அவர் களுடைய நடவடிக்கைகளும், தற்போதய உள்ளூராட்சி சபை தேர்தல் பிரசாரங்களும் வடகிழக்கில் தமிழ் பிரதேசங்களில் முகாம் இட்டு பிரசாரங்களை செய்து வருகின்றனர்.
உள்ளூராட்சி சபைத்தேர்தல் முடிவில் அவர்க ளின் பிரசாரத்திற்கு மயங்கி வடகிழக்கு தமிழர்கள் வாக்களித்து கூடிய ஆசனங்களை, சபைகளை, வட் டாரங்களில் கிடைக்கும் வாக்குத்தொகையை வைத்து வடகிழக்கு தமிழ்மக்களும் தம்மையே ஆதரிக்கின்றனர்.
அவர்களுக்கு சமஷ்டி தீர்வோ, அரசியல் தீர்வோ தேவையில்லை என்பதை நிருபித்து புதிய அரசியல் யாப்பில் நாடும் எங்களுடன் வட கிழக்கு தாயகமும் எங்களுடன் என்ற கருத்தை நிருபிக்கவே முயல்வதை காணலாம்.
எனவே தமிழ் மக்கள் உள்ளூராட்சி சபை தேர்தலில் தமிழ்த்தேசியத்தின் பலத்தை தமிழ்தேசிய கட்சிகளுக்கு மட்டும் வாக்களித்து எமது ஒற்றுமையை காட்ட வேண்டிய அவசியம் உண்டு.