ஆப்கானிஸ்தானில் தாக்குதல்கள் அதிகரித்துள்ள நிலையில் அமெரிக்க படைகள் மீளழைப்பு

ஆப்கானிஸ்தானில் போரில் இதுவரை 2,372 அமெரிக்க படையினர் கொல்லப்பட்டுள்ளனர். 20,320 பேர் காயமடைந்துள்ளனர்.இந்நிலையில்,

அங்கிருந்து 5 400 அமெரிக்கப் படையினர் மீள அழைக்கப்படவுள்ளனர். 20 வாரங்களுக்குள் துருப்பினரை மீளப்பெறும் நடவடிக்கை இடம்பெறவுள்ளது.

தலிபான் ஆயுததாரிகளுடன் ஏற்படுத்திக்கொள்ளப்பட்ட சமாதான உடன்படிக்கையின் பின்னர் வொஷிங்டனின் உயரதிகாரி ஒருவர் முதல்தடவையாக தொலைக்காட்சி நேர்காணலொன்றில் இந்த விடயத்தைக் கூறியுள்ளார்.

ஆனால், படையினரை மீளப்பெறும் இறுதித் தீர்மானத்திற்கு அனுமதி வழங்குவது அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பிலேயே தங்கியுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இந்தத் தொலைக்காட்சி நேர்காணல் ஔிபரப்பப்பட்டதும் காபூலில் பாரிய குண்டுத் தாக்குதல் இடம்பெற்றுள்ளது.

இந்தத் தாக்குதலில் குறைந்தது 16 பேர் கொல்லப்பட்டுள்ளதுடன், பலர் காயமடைந்துள்ளனர்.

குறித்த தாக்குதலுக்கு பொறுப்பேற்றுள்ள தலிபான் அமைப்பு, வௌிநாட்டுப் படைகளை இலக்கு வைத்தே தாக்குதல் மேற்கொள்ளப்பட்டதாகக் குறிப்பிட்டுள்ளது.

ஆப்கானில் அண்மைக்காலமாக தாக்குதல்கள் அதிகரிக்கப்பட்டுள்ள நிலையில் இந்த படைமீளழைப்பு இடம்பெறுவது குறிப்பிடத்தக்கது