ஆப்கானிஸ்தானில் கடந்த 5 வருடங்களில் வான்வழி தாக்குதலில் 1,600 குழந்தைகள் பலி: ஐ.நா. தகவல்

கடந்த 5 வருடங்களில் வான்வழித் தாக்குதலில் 1,600 குழந்தைகள் பலியாகியுள்ளதாக ஐக்கிய நாடுகள் சபை தெரிவித்துள்ளது.

இதுகுறித்து ஐக்கிய நாடுகள் சபை வெளியிட்ட அறிக்கையில், “ ஆப்கானிஸ்தானில் கடந்த 5 ஆண்டுகளாக நடத்தப்பட்ட வான்வழித் தாக்குதலில் 40% மக்கள் கொல்லப்பட்டிருக்கிறார்கள். இதில் குழந்தைகள் மட்டும் 1,600 பேர் பலியாகி உள்ளனர். ஆப்கானிஸ்தான் பல வருடங்களாக குழந்தைகளுக்கு பாதுகாப்பானதாக இருந்ததில்லை” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.