ஊர் அதிகார ஆட்சிகளான உள்ளூராட்சி சபைகளின் தேர்தல் முடிந்ததன் பின்னர் தற்போது ஆட்சிகளை பிடிப்பதற்கான பேரம் பேசும் செயல்களுடன் சபைகள் ஆட்சியமைத்தல் இந்த மாதத்துடன் நிறைவுறுகிறது. ஆட்சிக்காக யாரோடும் சேருவோம் அரசியல் தீர்வுக்காக விலகிச்செல்வோம் என்ற நிலையிலேயே சகல தமிழ்த்தேசிய கட்சிகளும் வட கிழக்கில் செயல்படுகின்றன.
வடக்கு கிழக்கை பொறுத்தவரை அனேகமான சபைகளில் இலங்கைத்தமிழ் அரசுக்கட்சி தவிசாளர், உபதவிசாளர் பதவிகளை தக்கவைத்துள் ளது. தமிழ்த்தேசிய கட்சிகள் யாவும் ஆட்சிய மைப்பதற்காக யாருடைய காலைப்பிடித்தாவது பதவி நிலைகளை பெறுவதையே காணமுடிகிறது.
கிழக்கு மாகாணத்தில் முழுமையாக மட்டக்களப்பு மாவட்டத்தில் சபை அமைப்பு விடயங்கள் நிறைவடைந்துள்ளன. அதில் தமிழரசுக்கட்சி எட்டு சபைகளிலும், மூன்று சபைகளில் ஶ்ரீலங்காமுஷ்லிம் காங்கிரசும், ஒரு சபையில் சுயேட்சைகுழுவும் ரிம்விபியும் சேர்ந்து ஆட்சியமைத்துள்ளன.
திருகோணமலை, அம்பாறை மாவட்டங்க ளில் இந்த மாதம் முடிவுறும் போது சபைகள் ஆட்சி முழுமை பெற்று இருந்த போதும் திருக்கோயில் பிரதேச சபை முழுமையாக ஒரு சுயேட்சை குழு அறுதிப்பெரும்பான்மையுடன் ஆட்சியமைத்து தமிழ்தேசிய கட்சிகளை ஓரம்கட்டியுள்ளது.
வடமாகாணத்தில் யாழ்ப்பாணம் மாநகர சபை உட்பட சில சபைகளை தமிழரசுக்கட்சி கைப்பற்றியபோதும் வலிகாமம் கிழக்கு பிரதேச சபை ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணி, தமிழ் தேசிய பேரவை அணி கைப்பற்றியுள்ளது.
இலங்கை தமிழ் அரசு கட்சியுடன் ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணி இணைந்து உள்ளூ ராட்சிசபைகளை அமைக்க விரும்பி, அதற்கான முயற்சிகளை மேற்கொண்ட போது, வலிகாமம் கிழக்கு பிரதேசசபையையும் குறிப்பிட்டே, அந்த முயற்சிகளை இலங்கை தமிழரசு கட்சி தோல்வியடையவைத்தது.
இலங்கை தமிழரசு கட்சியின் தலை மையின் தீர்மானங்களால் அதிருப்தியடைந்துள்ள பிரதேசசபை உறுப்பினர்கள், இரகசிய வாக்கெடுப் பில் காலைவாரும் சம்பவங்கள் அடுத்தடுத்து நடந்து வருகிறது. கரவெட்டி பிரதேசசபையில் இலங்கை தமிழரசு கட்சி உறுப்பினர் ஒருவர் எதிர்தரப்புக்கு வாக்களித்திருக்கலாம் என கருதப்படுகிறது. இதில் 1 வாக்கு வித்தியாசத்தில் இலங்கை தமிழரசு கட்சி மயிரிழையில் தப்பிப்பிழைத்தது.
தமிழ் தேசிய பேரவை 5, ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணி 5 உறுப்பினர்களையும் கொண்டிருந்தன.
தேசிய மக்கள் சக்தி 9 உறுப்பினர்களை கொண்டிருந்தது.ஈபிடிபி யிலிருந்து பிரிந்தவர்கள் சுயேட் சையாக களமிறங்கி 2 ஆசனங்களையும், மற்றொரு சுயேட்சை அணி 1 ஆசனத்தையும் கொண்டிருந்தது.
இலங்கை தமிழ் அரசு கட்சி, ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணி, தேசிய மக்கள் சக்தி சார்பில் தவிசாளர் வேட்பாளர்கள் நிறுத்தப்பட்டனர். முதற்கட்ட வாக்கெடுப்பில் குறைந்த வாக்கு பெற்ற தேசிய மக்கள் சக்தி உறுப்பினர் வெளியேற்றப் பட்டார்.
அடுத்த வாக்கெடுப்பு இரகசியமா, பகிரங் கமா என தீர்மானிக்க வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. இதில் இரு தெரிவுகளுக்கும் சம எண்ணிக்கையான வாக்கெடுப்புக்கள் கிடைத்ததையடுத்து, திருவுள சீட்டு முறையில் இரகசிய வாக்கெடுப்பு நடத்த தீர்மானிக்கப்பட்டது. வலிகாமம் கிழக்கில் இலங்கை தமிழரசு கட்சி ஆட்சியமைக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளதை காணலாம்.
எதுவானாலும் சகல உள்ளூராட்சிசபைகளி னதும் ஆட்சியமைக்கும் நடவடிக்கை இம் மாதம் 30/06/2025, உடன் நிறைவடையும்.அதன்
பின்னர் எல்லா சபைகளும் பெயரளவில் இயங்க ஆரம்பித்தாலும் அவை செயல்வடிவில் முன்கொண்டு செல்ல அந்தந்த சபைகளின் வருமானங்கள் கூடிய சபைகள் ஓரளவு திருப்தியுடன் தமது ஆட்சி அதிகாரங்களை முன்எடுத்தாலும் வடகிழக்கில் பல பிரதேச சபைகள் வருமானம் குறைந்த சபைகளாகவே உள்ளதால் அபிவிருத்தி வேலைகளில் ஏற்றத்தாழ்வுகள் தொடரவும் வாய்ப்புள்ளது.
அரச நிதி ஒதுக்கீடுகளை பொறுத்தவரை தேசிய மக்கள்சக்தி அரசாங்கம் பாரியளவில் அபிவிருத்திக்காக பிரதேச சபைகளுக்கு நிதி ஒதுக்ககூடியளவில் தற்போது இல்லை.
ஆட்சி யமைத்து முடிந்தபின்னர் ஆளும்
கட்சி எதிர்கட்சி என்பது உள்ளூராட்சி சபைகளில் இல்லை உள்ளூராட்சி சபைகளுக்கான அதி காரங்கள் மாநகர சபை ‘நகர சபை ‘பிரதேச சபை என்ற வேறுபாடு இன்றி சகல கெளரவ உறுப் பினர்களுக்கும் அதிகாரங்கள் ஒன்றுதான் இதில் ஆளும் தரப்பு எதிர்தரப்பு என்ற வேறுபாடு இல்லை கட்சி வேறுபாடின்றி மக்களின் நலனுக்காக செயற்படுவது சகல கெளரவ உறுப்பினர்களின் கடமையாகும் அதிலும் சபைகளினுடைய அதிகாரங்களை கையாள்வது ஆணையாளர், மற்றும் செயலாளர்களின் கடமையாகும்
மாநகர சபையின் முதல்வர் பதவி என்பது சபையின் தலைவர் மற்றும் நிர்வாகத்தின் முக்கிய நபராக மாநகரமுதல்வர் செயல்படுகிறார். மாநகர சபையின் கொள்கைகளை வகுப்பதிலும், அவற்றை நடைமுறைப்படுத்துவதிலும், மாநகரத்
தின் வளர்ச்சிக்கான திட்டங்களை செயல் படுத்துவதிலும் முக்கிய பங்கு வகிக்கிறார். மேலும், மாநகர சபையின் நடவடிக்கைகளுக்கு பொறுப் பேற்பதுடன், மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதியாக அவர்களின் நலனுக்காக செயல்படுகி றார்.
மாநகர சபை முதல்வரின் கடமைகள் பின் வருமாறு:
* சபை நடவடிக்கைகளை வழிநடத்துதல்:மாநகர சபைக் கூட்டங்களை கூட்டி, அதன் நிகழ்ச்சி நிரலை தீர்மானித்து, விவாதங்களை வழிநடத்தி, தீர்மானங்களை நிறைவேற்ற உதவுதல். மாநகர அபிவிருத்தி திட்டங்களை செயல்படுத்துதல்.
* மாநகரத்தின் வளர்ச்சிக்கு தேவையான திட்டங் களை வகுத்து, அவற்றை செயல்படுத்துவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளுதல்.
* நிதி மேலாண்மை: மாநகர சபையின் நிதி ஆதாரங்களை திறம்பட நிர்வகித்து, வரவு-செலவு திட்டங்களை தயாரித்து, செயல்படுத்த உதவுதல்.
* சுகாதாரம் மற்றும் தூய்மை பேணுதல்: மாநகரத்தின் சுகாதாரம் மற்றும் தூய்மையை பேணு வதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளுதல்.
* பொதுமக்களின் குறைகளை நிவர்த்தி செய்தல்: மாநகர மக்களின் குறைகளை கேட்டறிந்து, அவற்றை தீர்ப்பதற்கான நடவடிக்கைகளை மேற் கொள்ளுதல்.
* சட்ட ஒழுங்குகளை பேணுதல்: மாநகர சபையின் சட்ட திட்டங்களை செயற்படுத்தி, சட்டம் ஒழுங்கை நிலைநாட்ட உதவுதல்.
* மாநகர சபையின் பிரதிநிதியாக செயல் படுதல்: மாநகர சபை மற்றும் மாநகர மக்களின் நலனுக்காக, பல்வேறு மட்டங்களில் பிரதிநிதித்துவம் செய்தல்.
* சுருக்கமாக, மாநகர சபை முதல்வரின் பணி என்பது மாநகரத்தின் வளர்ச்சிக்கான திட்டங்களை வகுத்து, அவற்றை செயல்படுத்தி, மாநகர மக்களின் நலனுக்காக உழைப்பதாகும்.
பிரதேசபை,நகரசபை தவிசாளர் பதவியா னது சபையின் நிர்வாகத்தை நடத்துவது மற்றும் சபையின் தீர்மானங்களை நடைமுறைப் படுத்து
வது ஆகும். மேலும், சபையின் வருடாந்த அபி விருத்தி திட்டத்தைத் தயாரித்தல், வரவு-செலவுத் திட்டத்தை நிறைவேற்றுதல் மற்றும் சபையின் நிதிகளை நிர்வகித்தல் ஆகியவை தவிசாளரின் கடமைகளில் அடங்கும்.
தவிசாளர் சபையின் நிர்வாகத் தலை வராக செயல்படுவார் சபையின் அனைத்து நடவடிக்கைகளையும் மேற்பார்வை செய்வதும் அவரின் கடமை. சபையின் தீர்மானங்களை நடைமுறைப்படுத்துவது மற்றும் சபையின் பணிக ளைச் செய்வது தவிசாளரின் பொறுப்பாகும். அவைகளோடு பின்வரும் கடமைகளும் அவருக் குண்டு.
* வருடாந்தத் திட்டம்: சபையின் வருடாந்த அபிவிருத்தி திட்டத்தைத் தயாரித்தல், அதற்குத் தேவையான வரவு-செலவுத் திட்டத்தைத் தயாரித் தல் மற்றும் அதை நடைமுறைப்படுத்துதல் ஆகியவை தவிசாளரின் முக்கிய கடமைகளாகும்.
* நிதி மேலாண்மை: சபையின் வரவு-செலவுத் திட்டத்தைத் தயாரித்து, நிதிகளை நிர்வகிப்பதும் தவிசாளரின் பொறுப்பாகும்.
* பொதுமக்கள் தொடர்பு: பொதுமக்களின் தேவை களையும், குறைகளையும் அறிந்து, சபையின் மூலம் அவற்றை நிவர்த்தி செய்ய தவிசாளர் முயற்சிக்க வேண்டும்.
* சபை விதிகளின்படி நடத்தல்: தவிசாளர் சபை யின் விதிகள் மற்றும் சட்டங்களுக்கு உட்பட்டு, நியாயமான முறையில் சபையை வழிநடத்த வேண்டும்.
* சுருக்கமாக, தவிசாளர் சபையின் அனைத்து நடவடிக்கைகளுக்கும் பொறுப்பானவர் மற்றும் சபையை திறம்பட வழிநடத்த வேண்டும். எனவே உள்ளூராட்சி சபையில் தெரிவான எந்த கட்சிசார்ந்தவர்களும் ஆளும் தரப்பு எதிர்த்தரப்பு என வேறுபாடுகள் இன்றி சகல வட்டாரங்களிலும் சமத்துவமாக அபிவிருத்தி, சேவைகளை செய்வதன்மூலம் வருடாந்த வரவு செலவு திட்ட முன்மொழிவுகளை எதிர்ப்புகள் இன்றி நிறைவேற்றி சபையை சரியாக கொண்டு நடத்தமுடியும்.
தமிழ்தேசியம் சார்ந்த கட்சிகளில் குறிப் பாக இலங்கை தமிழ் அரசுக்கட்சி பெரும் பான்மை கொண்ட சபை உறுப்பினர்கள், தமிழ்த்தேசிய உணர்வுள்ள வட்டாரங்களில் தமிழ்தேசிய கொள்கைசார் விடயங்களையும், இளைஞர் யுவதிகளுக்கான விழிப்பூட்டல், போதைவஸ்து பாவனைகளுக்கு எதிரான கருத்தாடல்கள், ஒழுக்கநெறி விழிப்பூட்டல் செயலமர்வுகளை நடத்துவதற்கும் வட்டார உறுப்பினர்கள் முன்
வருவதோடு. ஈழவிடுதலை போராட்ட வரலாறு களையும், அதனோடு இணைந்த நிகழ்வுகளுக்கும் சகல சபைகளும் முன்னுரிமை கொடுப்பதும் மிக அவசியம்.
அடிமட்ட மக்களுடன் பழகும் உள்ளூ ராட்சி சபை உறுப்பினர்கள் இனம், மொழி, நிலம், மாண்பு, சார்ந்த விடயங்களிலும் சட்ட திட்டங்களுக்கு அப்பால் இன உணர்வு கொண்டவர்களாக பணி செய்வதே சாலச்சிறந்தது.