Home உலகச் செய்திகள் அவுஸ்திரேலிய தடுப்பிலிருந்து பல ஆண்டுகளுக்குப் பின் விடுவிக்கப்பட்ட தமிழ் அகதி: அடுத்து என்ன?

அவுஸ்திரேலிய தடுப்பிலிருந்து பல ஆண்டுகளுக்குப் பின் விடுவிக்கப்பட்ட தமிழ் அகதி: அடுத்து என்ன?

266 Views

அவுஸ்திரேலியாவில் படகு வழியாக தஞ்சமடைந்திருந்த இலங்கைத் தமிழ் அகதியான தனுஷ் செல்வராசா  சுமார் 6 ஆண்டுகள் மனுஸ்தீவு தடுப்பு முகாமிலும் பின்னர் மெல்பேர்ன் குடிவரவுஇடைத்தங்கல் முகாமிலும் வைக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது தற்காலிக இணைப்பு விசாவில் வழங்கப்பட்டு அவுஸ்திரேலிய சமூகத்திற்குள் விடுவிக்கப்பட்டிருக்கிறார். 

“கடந்த கால சித்ரவதைகளிலிருந்து மீள எனக்கு கொஞ்சம் காலம் தேவை. என்ன செய்யப் போகிறேன் என்பதைக் குறித்த முடிவை இன்னும் நான் எடுக்கவில்லை. ஏனெனில் என்னிடம் 6 மாத கால விசா மட்டுமே உள்ளது,” எனக் கூறியிருக்கிறார் தனுஷ் செல்வராசா.

இந்த 6 மாத இணைப்பு விசா கொண்ட ஓர் அகதி, அவுஸ்திரேலியாவில் வேலை செய்ய அனுமதிக்கப்படுகிறார். அதே சமயம், அவர்களுக்கு அங்கு கல்விக் கற்க அனுமதியில்லை.

மேலும் Medicare எனும் மருத்துவக் காப்பீடு வழங்கப்படுகின்றது. ஆனால், எவ்விதமான அரசின் பொருளாதார உதவிகளும் இவர்களுக்கு வழங்கப்படுவதில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இவ்வாறு படகு வழியாக வந்த அகதிகளுக்கு தற்காலிக விசா வழங்கப்பட்டாலும் அவர்களுக்கு நிரந்தரமான தீர்வு கிடைப்பதில் அவுஸ்திரேலியாவில் பெரும் சிக்கல்கள் உள்ளன.  அவுஸ்திரேலியாவைப் பொறுத்த மட்டில்,  படகு வழியாக தஞ்சமடைந்தவர்கள் ஒருபோதும் நிரந்தரமாக இங்கு குடியமர்த்தப்பட மாட்டார்கள் என்பதை தொடர்ந்து முன்வைத்து வருகிறது.

NO COMMENTS

Leave a Reply

Exit mobile version