அவுஸ்திரேலியாவில் 18,000 பேர் இடம்பெயர்வு

578 Views

அவுஸ்திரேலியாவில் நியூ சவுத் வேல்ஸ் மாநிலத்தில் கன மழை தொடர்ந்து பெய்து வருவதால் வெள்ளத்தில் சிக்கித் தவித்த சுமார் 18,000 பேர் பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேற்றப்பட்டுள்ளனர்.

மாநில தலைநகரான சிட்னி நகரம், மற்றும் தென்கிழக்கு குயின்ஸ்லாந்தில் ஆறுகள் மற்றும் அணைகள் நிரம்பி உள்ளது.

நியூ சவுத்வேல்ஸ் மாநிலத்தில் கடந்த 50 ஆண்டுகளில் இல்லாதளவு பலத்த மழை கொட்டித் தீா்த்து வருவதால் சிட்னியில் பெரும்பாலான பகுதிகள் வெள்ள அபாயத்தை எதிர்கொண்டுள்ளன.

இதனையடுத்து நியூ சவுத்வேல்ஸ் மத்திய மற்றும் வடக்கு பகுதிகளில் இயற்கைப் பேரிடர் நிலை அறிவிக்கப்பட்டுள்ளது.

கோடை காலத்தில் ஏற்பட்ட காட்டுத் தீ மற்றும் கடும் வரட்சியால் பாதிக்கப்பட்டுள்ள பகுதிகளைச் சோ்ந்த மக்களே மழை-வெள்ளத்தாலும் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

மழை – வெள்ளத்தால் நியூ சவுத்வேல்ஸில் பரவலான சேதம் ஏற்பட்டுள்ளது. பாதிக்கப்பட்டுள்ள பகுதிகளில் அவுஸ்திரேலியாவின் 25 மில்லியன் மக்கள் தொகையில் மூன்றில் ஒரு பங்கினர் வாழ்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply