அவுஸ்திரேலியாவில் தஞ்சக் கோரிக்கை ஏற்கப்பட்ட அகதிகள் அந்நாட்டுக்குள்  நுழைய முடியாத நிலை

215 Views

அவுஸ்திரேலிய அரசால் தஞ்சக்கோரிக்கை ஏற்கப்பட்ட சுமார் 1,200க்கும் மேற்பட்ட அகதிகளுக்கு கடந்த ஆண்டு ஓகஸ்ட் முதல் இதுவரை பயண விலக்கு கிடைக்காததால் அவர்கள் அவுஸ்திரேலியாவுக்குள் நுழைய முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக எஸ்பிஎஸ் ஊடகம் தெரிவித்துள்ளது.

கடந்த ஓகஸ்ட் 2020 முதல் மே 2021 வரை 1,826 பயண விலக்குக் கோரி விண்ணப்பித்ததில் 1,251 அகதிகளின் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டுள்ளன. அந்த வகையில் சுமார் 30 சதவீதமான அகதிகளுக்கு மட்டுமே அவுஸ்திரேலியாவுக்குள் வருவதற்கான பயண விலக்கு வழங்கப்பட்டுள்ளது.

கொரோனா கால பயணக்கட்டுப்பாடுகளில் அவுஸ்திரேலியாவில் பாதுகாப்புக் கிடைத்தும் அகதிகளுக்கு அவுஸ்திரேலியாவுக்குள் நுழைய முடியாத நிலை ஏற்பட்டுள்ளமை இங்கு குறிப்பிடத்தக்கது.

Leave a Reply