அவுஸ்திரேலியாவில் தஞ்சக்கோரிக்கையாளர்களுக்கான முதல் கட்ட நேர்காணல் ஆரம்பம்

வரும் ஜூன் 30ம் தேதிக்குள் 1200 தஞ்சக்கோரிக்கையாளர்களுக்கான முதல் கட்ட நேர்காணல்களை முடிக்க அவுஸ்திரேலிய உள்துறை திட்டமிட்டுள்ளதாக சமூக சட்ட மையங்கள் எச்சரிக்கை விடுத்துள்ள நிலையில், வழக்கறிஞர்களின் தேவை அதிகரித்துள்ளதால் அகதிகளுக்கு சட்ட உதவிக்கிடைக்காமல் போகக்கூடும் என சட்ட உதவி மையங்கள் தெரிவித்துள்ளன.

“சட்டவிரோத கடல் வருகையின் மூலம் வந்தவர்கள் 2017 அக்டோபர் 1ம் திகதிக்குள் தங்கள் தஞ்சக்கோரிக்கை விண்ணப்பங்களை சமர்பிக்க அறிவுறுத்தப்பட்டிருந்தது.

அதன் பிறகு எப்போது வேண்டுமானாலும் கூடுதல் தகவல்களை சம்பந்தப்பட்ட விண்ணப்பத்தாரரிடம் கேட்கலாம். திட்டமிடப்பட்ட நேர்காணல் தொடர்பாக 14 நாட்களுக்குள் அறிவிக்க வேண்டும் என சட்டம் சொல்கிறது.

அதனடிப்படையில் குறைந்தபட்சம் 14 நாட்களுக்கு முன்னதாக உள்துறை சம்பந்தப்பட்ட தஞ்சக்கோரிக்கையாளருக்கு நேர்காணல் தேதியை அறிவுறுத்தியுள்ளது,” என அவுஸ்திரேலிய உள்துறை தரப்பில் கூறப்பட்டுள்ளது.