அவுஸ்திரேலியாவால் 3 ஆண்டுகளாக சிறைப் படுத்தப்பட்டுள்ள தமிழ் அகதி குடும்பம்

இலங்கையிலிருந்து வெளியேறி படகு வழியாக அவுஸ்திரேலியாவில் தஞ்சமடைந்த நடேசலிங்கமும் பிரியாவும் அந்நாட்டில் சந்தித்து திருமணம் செய்து கொண்ட தமிழ் அகதிகளாவர். அவர்களுக்கு அவுஸ்திரேலியாவிலேயே 2 பெண் குழந்தைகள் பிறந்த நிலையில் விசா காலாவதியாகியதாக 2018ம் ஆண்டு கைது செய்யப்பட்டனர்.

பின்னர், கடந்த 2019ம் ஆண்டு அவுஸ்திரேலியாவின் பெருநிலப்பரப்பிற்கு வெளியே உள்ள கிறிஸ்துமஸ் தீவுக்கு அனுப்பப்பட்ட நிலையில், சுமார் 3 ஆண்டுகளை அக்குடும்பம் தடுப்பிலேயே கழித்திருக்கிறது. அதில் இரண்டாவது குழந்தையான கோபிகா தனது குழந்தைப் பருவத்தின் பெரும்பகுதியை தடுப்பிலேயே கழித்துள்ளது.

இக்குடும்பம் 24 மணிநேர கண்காணிப்பின் கீழ் வைக்கப்பட்டுள்ள சூழலில், இதற்கு மட்டும் இதுவரை 6 மில்லியன் அவுஸ்திரேலிய டொலர்கள் செலவு செய்யப்பட்டுள்ளன.