Tamil News
Home செய்திகள் அருட்தந்தை ஜீவந்த பீரிஸ் உயர் நீதிமன்றத்தில் அடிப்படை உரிமை மனு தாக்கல்

அருட்தந்தை ஜீவந்த பீரிஸ் உயர் நீதிமன்றத்தில் அடிப்படை உரிமை மனு தாக்கல்

தான் கைது செய்யப்படுவதை தடுக்க உத்தரவிடுமாறு கோரி அருட்தந்தை ஜீவந்த பீரிஸ் உயர் நீதிமன்றில் அடிப்படை உரிமை மீறல் மனுவொன்றை தாக்கல் செய்துள்ளார்.

மேல் மாகாணத்திற்குப் பொறுப்பான சிரேஷ்ட பிரதிப் பொலிஸ்மா அதிபர் தேசபந்து தென்னகோன், பொலிஸ்மா அதிபர், இராணுவத் தளபதி, விமானப்படைத் தளபதி, கடற்படைத் தளபதி, சட்டமா அதிபர் உள்ளிட்டோர் பிரதிவாதிகளாக மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளனர்.

எவ்வித நியாயமான அடிப்படையும் இன்றி தம்மை கைது செய்ய பிரதிவாதிகள் தயாராகி வருவதாகவும் குறித்த மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன், தனது அடிப்படை உரிமைகள் மீறப்படுவதாக தீர்ப்பு வழங்குமாறும், தன்னை கைது செய்வதை தடுக்க உத்தரவிடுமாறும் அருட்தந்தை ஜீவந்த பீரிஸ் குறித்த மனுவில் மேலும் கோரியுள்ளார்.

Exit mobile version