அரசியல் பழிவாங்கல்கள் குறித்து தனி விவாதம்: ஐ.தே.க. திட்டமிடுகின்றது

எதிர்வரும் பொதுத் தேர்தல் தொடர்பான கருத்துக்கள் மற்றும் திட்டங்கள் குறித்த அறிக்கையை தொகுத்து ஒரு வாரத்துக்குள் சமர்ப்பிக்குமாறு ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க கட்சி யின் மாவட்ட அமைப்பாளர்களுக்கு உத்தரவிட்டுள்ளார்.

கட்சியின் தலைமையகமான சிறிகொத்தாவில் நேற்று இடம்பெற்ற கூட்டத்தில் பேசிய ரணில் விக்கிரமசிங்க, திட்டங்களை செயல்படுத்துவதன் மூலமே அடுத்த தேர்தலில் கட்சியை வெற்றிப்பாதைக்கு கொண்டு செல்ல முடியும் என்று கூறினார்.

எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலை வெற்றிகரமாக எதிர்கொள்ள கட்சியைத் தயார்படுத்துவதற்காக முன்வைக்கப்பட்ட அனைத்துத் திட்டங்கள் குறித்தும் பேசுவதற்காக இந்தச் சந்திப்பு இடம்பெற்றது.

இதேவேளை, தற்போதைய அரசால் மேற்கொள்ளப்படும் அரசியல் பழிவாங்கும் நடவடிக்கைகள் குறித்தும் இதன்போது தனி விவாதம் ஒன்று இடம்பெற் றதாகவும் ஐக்கிய தேசியக் கட்சியின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply