Tamil News
Home செய்திகள் அரசியல் தீர்வுக்கான வாய்ப்புகள் வெகுவாக குறைந்துள்ளது: சுமந்திரன் சொல்கின்றார்

அரசியல் தீர்வுக்கான வாய்ப்புகள் வெகுவாக குறைந்துள்ளது: சுமந்திரன் சொல்கின்றார்

தற்போதைய அரசின் செயற்பாடுகளால், அரசியல் தீர்வுக்கான வாய்ப்புகள் வெகுவாகக் குறைந்துள்ளன என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.

தனியார் ஊடகமொன்றுக்கு வழங்கிய நேர்காணலிலேயே அவர் இவ்வாறு கூறியுள்ளார். அவர் மேலும் தெரிவிக்கையில் –

புதிய ஜனாதிபதி தெரிவு செய்யப்பட்ட உடனேயே அவருக்கு ஒரு சில விடயங்களை நினைவு படுத்தியிருக்கிறோம். ஜனாதிபதிக்குச் சிறுபான்மை மக்களின் வாக்குகள் கிடைக்கவில்லை. எனவே அந்த மக்களின் பிரதிநிதிகளுடன் கலந்துரையாட வேண்டுமென நாம் பகிரங்கமாக ஜனாதிபதிக்குத் தெரிவித்திருந்தோம். ஆனாலும் அவர் இதுவரை எந்தவிதமான பதிலையும் வழங்கவில்லை. இதன் மூலம், அரசியல் தீர்வுக்கான வாய்ப்பு வெகுவாக குறைந்துள்ளது. மேலும் ஜனாதிபதி இவ்விடயத்தைக் கவனத்தில் எடுக்க மாட்டாரென தோன்றுகின்றது.

எதிர்வரும் பொதுத் தேர்தலில் வெளிமாவட்டங்களில் போட்டியிடுவதுத் தொடர்பாக ஆராய்ந்து வருகின்றோம். இன்னும் தீர்மானம் எதனையும் நாம் எடுக்கவில்லை. கூட்டமைப்பு கொழும்பில் போட்டியிட்டால் மனோ கணேசனின் வெற்றி வாய்ப்பை அது குறைக்கலாம். அல்லது அவரும் நாங்களும் இணங்கி வியூகம் அமைத்துப் போட்டியிட்டால், கொழும்பில் அவரது வெற்றி வாய்ப்பைக் குறைக்காமலும், இன்னொரு தமிழ்ப் பிரதிநிதித்துவத்தைப் பெற்றுக் கொள்ளவும் முடியும்” என்றார்.

Exit mobile version