Tamil News
Home செய்திகள் அரசியல் உரிமை என்பது தமிழர்களுக்கு காத்திரமான ஒன்று- கணபதி பிரசாந்

அரசியல் உரிமை என்பது தமிழர்களுக்கு காத்திரமான ஒன்று- கணபதி பிரசாந்

“வடக்கு கிழக்கில் தமிழ் மக்கள் நிலசுறண்டல் மற்றும் மத ஆக்கிரமிப்புக்களுக்கு முகம் கொடுத்து வருகின்றார்கள்“ என வடக்கு கிழக்கு ஒருங்கிணைப்பு குழுவின் முல்லைத்தீவு மாவட்ட இணைப்பாளர் கணபதி பிரசாந்   தெரிவித்துள்ளார்.

ஒருங்கிணைப்பு குழுவினால் இயங்கிவரும் சூழலியல் மற்றும் சமூக அபிவிருத்திக்கான நிறுவனத்தின் ஏற்பாட்டில் ஒட்டுசுட்டான் பிரதேச செயலகத்திற்கு முன்பாக கவனயீர்ப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது. அதில் கலந்து கொண்டு ஊடகங்களிடம் தனது கருத்தை பதிவு செய்த அவர்,

“இவ்வாறான ஆக்கிரமிப்பு செயற்பாட்டை தடுத்து   நிறுத்தவேண்டுமாக இருந்தால் அரசியல் உரிமை முக்கியமாகும்.   அண்மை காலத்தில்   குருந்தூர் மலை பிரச்சினையை பார்த்தால் நீதிமன்ற உத்தரவினை மீறியும் அங்கு கட்டுமானங்கள் கட்டப்படுகின்றது. அதனை தடுப்பதற்கு யாரும் இல்லாத நிலை காணப்படுகின்றது. இவற்றை மாற்றி அமைக்க வேண்டுமாக இருந்தால், தமிழ் மக்கள் தங்களின் இருப்பினை நிலைநிறுத்திகொள்ள வேண்டும். அதற்கு தமிழர்களுக்கு அரசியல் உரிமை என்பது காத்திரமான ஒன்று என தெரிவித்துள்ளார்.

Exit mobile version