அரசியல் அபிலாசைகளுக்கு தீர்வு கிடைக்க பிரார்த்திப்போம் : சம்பந்தனின் வாழ்த்துச் செய்தி

பொங்கல் திருநாளில் மக்களின் அபிலாசைகளுக்கு தீர்வு கிடைக்க பிராத்தனை செய்ய தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன் அழைப்பு விடுத்துள்ளார்.

okkkk அரசியல் அபிலாசைகளுக்கு தீர்வு கிடைக்க பிரார்த்திப்போம் : சம்பந்தனின் வாழ்த்துச் செய்தி

தமிழ் மக்கள் அனைவரும் சூரியனுக்கு நன்றிக்கூறி கொண்டாடவும் தைப்பொங்கல் திருவிழாவிற்கு மக்களுக்கு அனுப்பியுள்ள வாழ்த்துச் செய்தியில் அவர் இவ்வாறு கூறியுள்ளார்.

அவ் வாழ்த்துச் செய்தியில் அவர்,

இலங்கை வாழ் அனைத்து தமிழ் மக்களுக்கும் எனது இனிய தைத்திருநாள் நல் வாழ்த்துக்களை தெரிவிப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன்.

மனித வாழ்வின் அடிப்படை தேவைகளை பூர்த்தி செய்து கொள்வதற்கான இயற்கை வளங்களை அருளும் சூரிய பகவானுக்கு நன்றி செலுத்தும் இந்த உழவர்தின திருநாளில் இன்னல்கள் பலவற்றுக்கு முகங்கொடுத்துள்ள எமது மக்களின் வாழ்வில் இருள் நீங்கி வளமான எதிர்காலம் அமைய நான் பிரார்த்தனை செய்கிறேன்.

மேலும் நீண்டகாலமாக தீர்வு காணப்படாத எமது மக்களின் அரசியல் அபிலாசைகள் சமத்துவமும் நீதியுமுள்ள ஒரு தீர்வினை கண்டடைய இந்த நன்னாளில் இறைவனை பிரார்த்திப்போமாக.

எமது பூர்விக நிலங்கள் அதிக விளைச்சலையும் செழிப்பையும் தந்து எம்மக்கள் தன்னிறைவுள்ள சமூகமாக மீண்டெழுந்து வளமான எதிர்காலத்தினை எமது வருங்கால சந்ததி கண்டுகொள்ள எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திக்கிறேன், என்று தெரிவித்து அனைத்து மக்களையும் வாழ்த்தியுள்ளார்

Leave a Reply