அரசாங்கத்தின் முதலாவது வரவு செலவு திட்டம் நிறைவேற்றம்!

தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் முதலாவது வரவு செலவு திட்டம் பாராளுமன்றில் இன்று திருத்தங்களுடன் நிறைவேற்றப்பட்டது.

இன்றைய தினம் (21) நிதியமைச்சு தொடர்பான குழு நிலை விவாதம் இடம்பெற்றது.  இதன் தொடர்ச்சியாக வரவு செலவு திட்டத்தின் மூன்றாம் வாசிப்பு மீதான வாக்கெடுப்பு நடத்தப்பட்டது.

இதன்போது வரவு செலவு திட்டம் 114 மேலதிக வாக்குகளால் நிறைவேற்றப்பட்டது.  இதன்படி, வரவு செலவு திட்டத்துக்கு ஆதரவாக 159 வாக்குகளும் எதிராக 45 வாக்குகளும் அளிக்கப்பட்டன. மன்னார் மாவட்ட எதிர்க்கட்சி பாராளுமன்ற உறுப்பினர் காதர் மஸ்தான் வரவு செலவு திட்டத்துக்கு ஆதரவாக வாக்களித்தார்.