அம்பாறை மாவட்டத்தின் மீது கவனத்தை திருப்பும் த.தே.ம.மு

தமிழத் தேசிய மக்கள் முன்னனியில் நாடாளுமன்ற உறுப்பினர் செ. கஜேந்திரன் அம்பாறை மாவட்டத்திற்கு இந்த வாரம் பயணம் மேற்கொண்டதுடன், கல்முனை பிரதேச செயலகத்தை தரமுயர்த்த தாம் நடவடிக்கை எடுக்கவுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

வன்னி மற்றும் கிழக்கு மாகாணத்தை பிரதிநித்துவம் செய்யும் உறுப்பினராக கஜேந்திரன் முன்னனியால் நியமனம் பெற்றதை தொடர்ந்தே அவரின் இந்த பயணம் அமைந்துள்ளது.

மக்களின் பிரச்சனைகளை ஆராயும் முகமாக பயணம் மேற்கொண்ட அவர் கல்முனை உப பிரதேச செயலகம், நாவிதன்வெளி செயலகம், திருக்கோவில் மற்றும் பொத்துவில் பகுதிகளுக்கும் பயணம் செய்திருந்தார்.