அம்பாந்தோட்டையில் பல்கலைக்கழகம் – சீனாவிடம் கோரிக்கை

344 Views

சிறீலங்காவின் அம்பாந்தோட்டை பகுதியில் தொழில்நுட்ப பல்கலைக்கழகம் ஒன்றை அமைப்பதற்கு சீனா உதவ வேண்டும் என்று சிறீலங்கா அரச தலைவர் கோத்தபாயா ராஜபக்சா விடுத்த வேண்டுகோளை சீனா அதிபர் ஜி ஜின்பிங் ஏற்றுக்கொண்டுள்ளார்.

அதேசமயம், சீனாவுக்கு பயணம் மேற்கொள்ளவிருந்த சிறீலங்கா அரச தலைவரின் பயணத்திற்கான அனுமதியை நீடித்துள்ளார் சீனா அதிபர்.

கடந்த செவ்வாய்க்கிழமை சீனா அரச தலைவருக்கும் சிறீலங்கா அரச தலைவருக்கும் இடையில் இடம்பெற்ற பேச்சுக்களின் போது சீனாவுக்கு பயணம் மேற்கொள்ள மிகுந்த ஆவலாக இருப்பதாக கோத்தபாயா தெரிவித்துள்ளதை அடுத்து சீனா இந்த நீடிப்பை வழங்கியுள்ளது.

Leave a Reply