என்றுமில்லாதவாறு அமெரிக்க – சீன பொருளாதார உறவுகளில் விரிசல்கள் ஏற்பட்டுள்ளதாக வொசிங்டனில் உள்ள சீன தூதரக அதிகாரி லியூ பென்கூ புதன்கிழமை (6) தெரிவித்துள்ளார்.
இரு தரப்பு முதலீடுகள் மீதான கட்டுப்பாடுகள், பொருளாதார தடைகள், ஏற்றுமதி இறக்குமதி வரி கட்டுப்பாடுகள் போன்றவையே இதற்கான காரணிகள்.
கடந்த 15 வருடங்களில் முதல் தடவையாக அமெரிக்காவில் இருந்து அதிக பொருட்களை இறக்குமதி செய்யும் நாடு என்ற நிலையை சீனா இழந்துள்ளது.
2016 ஆம் ஆண்டில் அமெரிக்காவில் அதிக முதலீடுகளை மேற்கொண்ட சீனா தற்போது அதனை வெகுவாக குறைத்துக்கொண்டுள்ளது என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.