Tamil News
Home உலகச் செய்திகள் அமெரிக்க கல்வித் துறையைக் கலைக்கும் கோப்புகளில் ட்ரம்ப் கையெழுத்து!

அமெரிக்க கல்வித் துறையைக் கலைக்கும் கோப்புகளில் ட்ரம்ப் கையெழுத்து!

அமெரிக்க கல்வித் துறையைக் கலைக்கும் கோப்புகளில் அதிபர் டொனால்ட் ட்ரம்ப் கையெழுத்திட்டுள்ளார். கடந்த ஜனவரி மாதம் அதிபராக பொறுப்பேற்றதில் இருந்தே ட்ரம்ப் பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை எடுத்து வருகிறார். அவற்றில் பெரும்பாலான நடவடிக்கைகளுக்கு செலவினங்களைக் குறைப்பதையே அவர் காரணமாகக் கூறி வருகிறார். இந்நிலையில் அமெரிக்க கல்வித் துறையைக் கலைக்கும் கோப்புகளில் கையெழுத்திட்டு பரபரப்பை கூட்டியுள்ளார் ட்ரம்ப்.

அதுமட்டுமல்லாமல் கல்வித் துறையை மாகாணங்கள் பட்டியலுக்கு மாற்றுவதற்கான பணிகளை வேகப்படுத்தும்படியும் கல்வித் துறை செயலாளருக்கு ட்ரம்ப் உத்தரவிட்டுள்ளார். ஆனால் அதேவேளையில் சிறப்பு மாணவர்களுக்கான நிதித் திட்டங்களை அமெரிக்க அரசு தொடர்ந்து வழங்கும் என்ற ஒரே ஒரு ஆறுதலை மட்டும் அதிபர் ட்ரம்ப் அளித்துள்ளார்.

Exit mobile version