அமெரிக்க அரச தலைவரால் சிறப்பு நியமனம் பெற்ற தூதுவர்

262 Views

இலங்கைக்காக மட்டும் புதிய அமெரிக்க தூதுவரை அமெரிக்காவின் அரச தலைவர் பிரத்தியோகமாக தெரிவுசெய்திருப்பது இதுவே முதல்முறையாகும் என கொழும்பு இராஜதந்திர வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

இலங்கைக்கான அமெரிக்காவின் புதிய தூதுவராக ஜுலி சங் அமெரிக்க அதிபர் ஜோ பைடன் அவர்களால் நியமிக்கப்பட்டுள்ளார். வெளிவிவகார அமைச்சகத்தில் மூத்த அதிகாரியாக கடமையாற்றிய அவர். தற்போது தென்கிழக்கு ஆசிய பிராந்திய வெளிவிவகார அதிகாரியகாவும் பணியாற்றி வருகின்றார்.

வழமையாக இலங்கை மற்றும் மாலைதீவுகளுக்கான தூதுவராகவே இலங்கையில் உள்ள அமெரிக்கத் தூதுவர் பணியாற்றுவதுண்டு ஆனால் இந்த தடவை இலங்கைக்கான தூதுவராக மட்டும் ஜுலி நியமிக்கப்பட்டுள்ளார். மாலைதீவு அமெரிக்காவின் படைத்துறை உடன்பாட்டை ஏற்றுக்கொண்டதால் அதற்கு தனியாக தூதுவர் நியமிக்கப்பட்டுள்ளார்.

தென்கொரியாவில் பிறந்த ஜுலி சீனாவின் இந்தோ-பசுபிக் பிராந்திய விரிவாக்கம் தொடர்பில் அதிக அனுபம் வாய்ந்தவர். அதற்கு எதிராக குரல்கொடுத்து வருபவர். தனது அபிவிருத்தி திட்டங்களில் சீனா தொழிலாளர் உரிமைகளை மதிப்பதில்லை என அவர் குற்றச்சாட்டுக்களை முன்வைத்து வந்திருந்தார்.

Leave a Reply