அமெரிக்காவின் ஆதிக்கத்தை முறியடிப்பதற்கு சிறீலங்கா அரச தலைவர் அதிக முயற்சிகளை எடுத்து வருகின்றார். அதன் அடுத்த நகர்வாக ரஸ்யா அதிபர் விளாமிடீர் பூட்டினுக்கு சிறீலங்கா வருமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது:
ஆசியப் பிராந்திய நாடுகளின் கூட்டத்தொடரில் கலந்துகொள்வதற்காக தஜிகிஸ்த்தானுக்கு சென்றுள்ள சிறீலங்கா அரச தலைவர் மைத்திரிபால சிறீசேனா அங்கு ரஸ்ய அதிபர் பூட்டினை சந்தித்து கலந்துரையாடியுள்ளார்.
ரஸ்யாவில் இருந்து சிறீலங்காவுக்கு இறக்குமதி செய்யப்படும் பொருட்கள் மீது அமெரிக்கா கொண்டுவந்துள்ள தடை தொடர்பில் ஆராயப்பட்டுள்ளதுடன் அதனை எவ்வாறு முறியடிக்கலாம் எனவும் இருவரும் கலந்துரையாடியுள்ளனர்.
மேலும் சிறீலங்காவுக்கு வருமாறு ரஸ்யா அரச தலைவருக்கு மைத்திரி அழைப்பு விடுத்ததுடன், இரு நாடுகளின் உறவுகளைப் பலப்படுத்தும் திட்டங்கள் தொடர்பிலும் ஆரயப்பட்டதாக சிறீலங்கா அரச தலைவர் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.