அமெரிக்காவின் 180 மில்லியன் டொலர் பெறுமதியான விமானத்தை ஈரான் சுட்டு வீழ்த்தியது

அமெரிக்காவுக்கும் ஈரானுக்கும் இடையில் ஏற்பட்டுள்ள முறுகல் நிலையின் அடுத்த பரிணாமமாக அமெரிக்காவின் அதி நவீன ஆளில்லாத உளவு விமானத்தை இன்று (20) ஈரான் சுட்டுவீழ்த்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

தமது நாட்டின் வான் எல்லைக்குள் பிரவேசித்த விமானத்தை நிலத்தில் இருந்து ஆகாயம் நோக்கி ஏவப்படும் ஏவுகணை மூலம் சுட்டுவீழ்த்தியுள்ளதாகவும், அமெரிக்காவுடன் முழு அளவிலான போருக்கு தயார் எனவும் ஈரான் தெரிவித்துள்ளது.

தமது நாட்டின் இறையான்மையை அமெரிக்கா மீறுவதாகவும் ஈரானிய கடற்படை தெரிவித்துள்ளது. இந்த தகவல் தொடர்பில் முதலில் கருத்துக்களைக் கூறமறுத்த அமெரிக்கா தற்போது விமானம் சுட்டு வீழ்த்தப்பட்டதை ஏற்றுக்கொண்டுள்ளதுடன், அது அனைத்துலக வான்பரப்பில் பறந்ததாகவும் தெரிவித்துள்ளது.

கடந்த மே மாதம் கார்மாஸ் கடற்பகுதியில் கப்பல்களுக்கு எரிபொருள் நிரப்பும் மையத்தில் நான்கு எண்ணைக் கப்பல்கள் மீது தாக்குதல்கள் மேற்கொள்ளப்பட்டிருந்தது. அதன் பின்னர் ஓமான் கடற்பகுதியில் வைத்து எண்ணைக் கப்பல் மீது டொர்பிடோ எனப்படும் கடல் ஏவுகணை மூலம் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டிருந்தது.

us drone அமெரிக்காவின் 180 மில்லியன் டொலர் பெறுமதியான விமானத்தை ஈரான் சுட்டு வீழ்த்தியதுஇவை அனைத்துக்கும் ஈரானே காரணம் என அமெரிக்கா தெரிவித்தபோதும் ஈரான் அதனை மறுத்துள்ளது.

இந்த நிலையில் தற்போது அமெரிக்காவின் மிக நவீன விமானத்தை ஈரான் வீழ்த்தியுள்ளது பதட்டத்தை அதிகரித்துள்ளது. சாம்-7 வகையான மீள்வடிவமைக்கப்பட்ட ஏவுகணையே இந்த தாக்குதலுக்கு பயன்படுத்தப்பட்டதாக தெரியவந்துள்ளது.