ஜனாதிபதி வேட்பாளர் அநுரகுமார திஸாநாயக்க உள்ளிட்ட தேசிய மக்கள் சக்தி கட்சி தேர்தல் சட்டங்களை மீறியமை மற்றும் அதற்கு எதிராக தேர்தல்கள் ஆணைக்குழு சரியாக செயற்படத் தவறியமை தொடர்பில் இலங்கை சீர்திருத்த அமைப்பு, ஐரோப்பிய ஒன்றியத்திடம் முறைப்பாடு செய்துள்ளது.
ஐரோப்பிய ஒன்றியத்திற்கு விசேட முறைப்பாடு ஒன்றை சமர்ப்பித்துள்ள அவர், தேர்தல் சட்ட மீறல்கள் தொடர்பில் தொடர்ச்சியாக முறைப்பாடுகள் முன்வைக்கப்பட்ட போதிலும் தேர்தல்கள் ஆணைக்குழு இதுவரை உரிய நடவடிக்கைகளை எடுக்கவில்லை என குறிப்பிட்டுள்ளார்.