அநுர ஆட்சியில் தமிழினத்தின்  ஆதங்கம் தீருமா? – பா.அரியநேத்திரன்

2024 செப்டம்பர் 21,ல்  இலங்கையின் 9,வது நிறைவேற்றதிகாரம் கொண்ட ஜனாதிபதி தேர்தல்  நடைபெற்றது.அந்த தேர்தலில்  ரணில் விக்கிரமசிங்க சுயேட்சையாக சிலின் டர் சின்னத்திலும்,எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச,ஐக்கிய மக்கள் சகதி தொலை

பேசி சின்னத்திலும்,அநுரகுமார திசநாயக்கா தேசிய மக்கள் சக்தி  திசைகாட்சி சின்னத்தி லும், முன்னாள் ஜனாதிபதியின்  மகிந்த ராசபக்சவின் மகன் நாமல் ராசபக்ச  பொதுசன பெரமுன கட்சி மொட்டுச்சின்னத்திலும், தமிழ்பொது வேட்பாளராக பா.அரியநேத்திரன் சுயேட்சையா சங்கு சின்னத்திலும் அவர்களுடன்  மொத்தமாக  38 பேர் போட்டியிட்டனர்.

இதில் புதிய ஜனாதிபதியாக அநுரகுமாரதி சநாயக்கா 5,634,915 வாக்குகளையும், 42.31% விழுக்காட்டுடனும் தெரிவானார். அவர் தெரிவாகி மூன்று நாட்களால்  2024 செப்டம்பர் 24 இல் பாராளுமன்றம் கலைக்கப்பட்டு தேர்தல் 2024, நவம்பர்,14,ல் இடம் பெற்றது.

இந்த பொதுத்தேர்தலில் இலங்கையின் சரித்திரத்தில் முதல்தடவையாக மிக அதிகப் படியான 159, ஆசனங்களை ஒரே கட்சி தேசிய மக்கள்சக்தி பெற்று ஆட்சியமைத்துள்ளது.

அந்த ஆட்சியமைத்து இன்றுடன்  (21/12/2024) சரியாக 27 நாட்கள் மட்டுமே கடந்துள் ளன.கிழக்கு மாகாணத்தை பொறுத்தமட்டில் ஜனாதிபதி பதவி ஏற்றவுடன் புதிய ஆளுநராக பேராசிரியர் ஜயந்த லால் ரத்னசேகரவையும்,திருகோணமலை மட்டக்களப்பு இரண்டு மாவட்டங்களின் அபிவிருத்தி குழு தலைவராக பிரதி அமைச்சர் திருகோணமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அருண் கேமச்சந்திரனை நியமித்துள்ளார்.

அம்பாறை மாவட்ட அபிவிருத்தி குழு தலைவராக அபூபக்கர் ஆதம்வாவா நியமிக்கப் பட்டுள்ளார். மட்டக்களப்பு மாவட்டத்தில் தேசிய மக்கள் சக்தி பாராளுமன்ற உறுப்பினராக கந்தசாமி பிரபு என்பவர் தெரிவாகியுள்ள நிலையிலும் அவரை மட்டக்களப்பு மாவட்ட அபிவிருத்திகுழு தலைவராக நியமிக்கவில்லை ஏன் அவர் ஆளு மையற்ற பாராளுமன்ற உறுப்பினர் என்பதை ஜனாதிபதி அநுராவின் செயல் தெளிவாக காட்டியுள்ளது.

மாவட்ட அபிவிருத்தி தொடர்பான விடயங்களை கையாள வேண்டியது அந்தந்த மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்களும் அந்த மாவட்டத்தை பிரதிநித்துவப்படுத்தும் மாவட்ட அபிவிருத்தி குழுத்தலைவருமாகும். ஆனால் திருகோணமலை, அம்பாறை மாவட்டங்களில் அதே மாவட்டத்தை சேர்ந்த பாராளுமன்ற உறுப்பினர்களை மாவட்ட ஒருங்கிணைப்பு தலைவராக நியமித்த ஜனாதிபதி மட் டக்களப்புக்கு தலைமைதாங்க திருகோணமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பிரை இறக்கு மதியாக்கியுள்ளார்.

கடந்த பாராளுமன்ற தேர்தலில் 22, மாவட் டங்களில் மட்டக்களப்பு மாவட்டம் மட்டுமே தேசிய மக்கள் சக்தி பின்னடைவை கண்டது அங்கு தமிழரசுக்கட்சி வழமை போன்றே மூன்று ஆசனங்களை பெற்றது. அவ்வாறு இருந்தும் ஒரே யொரு உறுப்பினர் தேசிய மக்கள் சக்தி மூலம் தெரிவாகினார். அவருக்கு மாவட்ட அபி விருத்திகுழு தலைவர் பதவியை வழங்காமல் அவரை பொம்மையாக பெயரளவில் வைத்து திருகோணமலை பாராளுமன்ற உறுப்பினருக்கு அபிவிருத்தி குழு பதவி வழங்கியது மட்டக்களப்பு மாவட்டமக்கள் மத்தியில் சந்தேகம் எழுந்துள்ளது. அவரை பொருத்தமான பாராளுமன்ற உறுப்பின ராக கருதப்படவில்லை என்பதே உண்மை.

கிழக்குமாகாணத்தை மட்டுமல்ல வடமாகாணத்திலும் இதே நிலைதான் தேசிய மக்கள் சக்திக்கு வாக்களித்து ஐந்து பாராளுமன்ற உறுப்பினர்கள் தெரிவாகி உள்ளனர் அவர்களும் பேசாமடந்தைகளாகவே செயல்படுவதையே கடந்த 27, நாட்களில் நாம் அவதானிக்க கூடியதாக உள்ளது யாழ்மாவட்டத்துக்கும் அங்கே மூன்று பாராளுமன்ற உறுப்பினர்கள் கருணானந்தன் இளங்குமாரன்,சண்முகநாதன் ஶ்ரீபவானந்தராஜன், ஜெயசந்திரமூர்த்தி ரஜீவன் ஆகியோரை யாழ்மாவட்ட மக்கள் பெரும் எதிர்பார்ப்புடன் வாக்களித்து பாராளுமன்ற உறுப்பினராக தெரி வாக வைத்தாலும் அவர்களில் ஒருவரை கூட அமைச்சராகவோ, பிரதி அமைச்சராகவோ, அபி விருத்திக்குழு தலைவராகவோ யாழ்ப்பாண மாவட்டத்தில் நியமிக்கவில்லை,

கடல்வளமீன்பிடி  அமைச்சர் சந்திரசேகரம் மலையகத்தை சேர்ந்தவரே யாழ்ப்பாணத்தையும் கவனிக்கும்படியாக தேசியபட்டியலும் வழங்கி மேலதிகமாக அபிவிருத்தி குழு தலைவராகவும் அவரை அழகுபார்த்துள்ளார் ஜனாதிபதி.

இருந்தபோதும் யாழ்ப்பாண மாவட்ட அபிவிருத்திக்குழு கூட்டம் சரியோ தவறோ நடத் தப்பட்டுவிட்டது, ஆனால் இதுவரை கிழக்கு மாகாணத்தில் எந்த ஒரு அபிவிருத்திக்கூட்டங்களும் இதுவரை கூட்டப்படவில்லை.

மட்டக்களப்பு மாவட்டத்தை பொறுத்த வரை விவசாயம், மீன்பிடி(ஆழ்கடல், வாவி, குளம்) கால்நடை வளர்ப்பு, உள்ளன அதில் இன்று பேசும் பொருளாக உள்ளது கால்நடைகள் மேயும் மேச்சல் தரை விவகாரம் இதற்கு மிகவும் முன்னுரிமை கொடுக்கப்பட வேண்டிய விடயமாக உள்ளது. மேச்சல்தரை விவகாரம் காலம் கால மாய் பேசும் பொருளாக மாறிவிட்டது யார் ஜனாதிபதியானாலும், யார் ஆட்சியமைத்தாலும் மயிலத்தமடு, மாதவனை, கெவிளியாமடு மேச்சல் தரைகள் தொடர்ச்சியாக   சிங்கள குடியேற்ற பூமியாக மாறிக்கொண்டிருக்கிறது.

தினமும் மாடுகளை கொலைசெய்தல், காணிகளில் அத்துமீறி குடியேறுதல் என தொடர் கதையாக உள்ளது. இந்த அத்துமீறலை தடுக்க பல பேச்சுக்கள், வழக்குகள், ஆர்ப்பாட்டங்கள் என எதை செய்தாலும் அதை கணக்கெடுப்பதாக எந்த ஆட்சி யாளர்களும் இதுவரை இல்லை.

சித்தாண்டி சந்தியில் கால்நடை பண்ணை யாளர்கள் தொடர்சியாக கடந்த 2023 மே மாதம் தொடக்கம் தொடர் போராட்டமாக செய்கின்றனர் அது நீடித்து செல்கிறது எவருமே அதனை தீர்க்கவில்லை.

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க மட்டக்களப்புக்கு விஜயம் செய்த போது செங்கலடி மத்திய மகாவித்தியாலயத்திற்கு அவரின் வருகையை எதிர்த்து கொம்மாதுறையில் கடந்த 2023 அக்டோபர் 7ஆம் திகதி பண்ணை யாளர்களும், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்கள்,அரசியல் வாதிகள், சிவில் செயல்பாட் டாளர்கள் என பலர் எதிர்ப்பு கவன ஈர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டபோது அதற்கான தீர்வு வழங்கப்படவில்லை போராட்டத்தில் கலந்து

கொண்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் களான பா.அரியநேத்திரன், ஞா.ஶ்ரீநேசன், சீ.யோகேஷ்வரன் உட்பட சிவில் அமைப்பு பிரதிநிதிகள் பண்ணையாளர்கள் என மொத்தமாக 37, பேருக்கு எதிராக ஏறாவூர் பொலிசார் கடந்த 28/10/2023 வழக்கு தாக்கல் செய்து இதுவரை 7, தவணைகள் நீதிமன்றத்தில் எடுக்கப்பட்டும் முடிவின்றி அடுத்த தவணை எதிர்வரும் 2025, ஜனவரி.22, ம் திகதி மீண்டும் அந்த வழக்கு உள்ளது.

பண்ணையாளர்களுக்கு மேச்சல் தரையில்லை அதனை கேட்டு கவன ஈர்ப்பு போராட்டங்களை செய்தால் பொலிசாரால் வழக்கு வழக்கும் இழுபறி, மேச்சல்தரையும் இழுபறி என்ற நிலைமை மட்டக்களப்பு பண்ணையாளர்களுக்கு ஏற்பட்டுள்ளது.

கடந்த ஜனாதிபதி தேர்தல், பொதுத்தேர்தல் காலமெல்லாம் பண்ணையாளர்கள் தொடர்ச்சியாக போராட்டத்தில் ஈடுபட்டும் புதிய ஜனாதிபதி அநுராவால் அது எந்தளவில் தீர்ப்பார் என்பதை பொறுத்திருந்து பார்க்க வேண்டியுள்ளது.

இதே நிலையில்தான் அம்பாறை மாவட் டத்திலும் கல்முனை வடக்கு பிரதேச செயலகத்தின் நிர்வாகத்தை பூரணமாக செயல்படும்படியாக கணக்காளர் நியமிக்கப்பட்டார். அந்த பிரதேச செயலகம் முழுமையான பிரதேச செயலகமாக மாற்றுமாறு கூறி பல வருடங்களாக கவன ஈர்ப்பு போராட்டங்கள் இடம்பெற்றுவருகிறது.

கடந்த ஜனாதிபதி தேர்தல், பொதுத்தேர்தல் காலத்திலும் இந்த போராட்டம் தொடர்ச்சியாக இடம்பெற்றும் எந்த பலனும் இல்லை.ஏற்கனவே ஜனாதிபதிகளாக இருந்த மகிந்தராஷபக்‌ஷ, மைத்திரிபால சிறிசேன, ரணில் விக்கிரமசிங்க எல்லோருமே முஸ்லீம் அரசியல் வாதிகளின் தயவால் ஆட்சி பீடம் ஏறியவர்கள் அதனால் முஸ்லீம் அரசியல் வாதிகளை புறம்தள்ளி கல்முனை வடக்கு பிரதேச செயலகத்தை தரம் உயர்ந்த முடியாமல் அவர்கள் நாடகம் ஆடினர் என்பது உண்மை. ஆனால் இப்போதய தேசிய மக்கள் சக்தி அரசானது யாருடைய தயவிலும் அவர்கள் ஆட்சியமைக்கவில்லை 159, அறுதிப்பெரும்பான்மை ஆசனங்களை கொண்ட இப்போதய அரசு கல்முனை வடக்கு பிரதேச செயலக விடயத்தை தீர்ப்பதற்கு முயலவேண்டும் அப்போதுதான் ஜனாதிபதி அநுரகுமார திசநாயக்கா பாராளுமன்றத்தில் ஆற்றிய அக்கிராசன உரையில் கூறிய சமத்துவமான நீதி எல்லா மக்களையும் சென்றடையும்.

கடந்த 16, ம் திகதி இந்தியப்பிரதமருடன் உரையாடிய அநுரகுமார திசநாயக்காவிடம் தமிழ்மக்களுக்கான அரசியல் தீர்வு விடயத்தில் மாகாணசபை தேர்தலை உடனே நடத்துமாறு பணித்துள்ளார்.

மாகாணசபை தேர்தல் நடைபெற்றாலும் அந்த 13. வது அரசியல் யாப்பில் உள்ள காணி அதிகாரம்,  காவல்துறை அதிகாரம் என்பன பூரணமாக வழங்க கூடியதான மன நிலை மாற்றமும் ஜனாதிபதி அநுராவுக்கு ஏற்பட்டால் மட்டுமே அவர் எதிர்பார்த்த நல்லிணக்கம் ஏற்படும்

அதேவேளை புதிய அரசியல்யாப்பு திருத்தமும் தேசிய மக்கள் சக்தி அரசால் எதிர்வரும் 2027, ல் நிறைவேற்றப்படும் என கூறப்படுகிறது.

அதிலும் இனப்பிரச்சனைக்கான தீர்வாக சமஷ்டி அடிப்படையிலான அரசியல் தீர்வு கிடைக்கும் விதமான விளங்க கூடிய சொற்கள் அரசியலமைப்பில் உள்வாங்கப்படல் வேண்டும் ஏற்கனவே நல்லாட்சி அரசில் முன்எடுக்கப்பட்டு கைவிடப்பட்ட வரைவானது சிங்கள மொழியிலும் தமிழ் மொழியிலும் பாரிய கருத்தாடல்களில் வித்தியாசங்கள் இருந்தன என பலர் குற்றம் சாட்டினர் அவ்வாறான தவறுகள் இன்றி அனைத்து தமிழ் தேசிய கட்சிகளும் ஏற்க கூடியதாக தமிழரசுக்கட்சி பாராளுமன்ற உறுப்பினர்கள் தற்போது தெரிவான எட்டு உறுப்பினர்களும் இதனை கவனத்தில் எடுப்பது மிக அவசியமாகும்.

இல்லை எனில் தனித்தனியாக ஒவ்வொரு கட்சியும் வேறு வேறு விதமாக திட்ட வரைவுகளை வைத்து கருத்துக்களை தெரிவித்தால் இன்னும் மக்கள் மத்தியில் அதிருப்தியே கூடும்.

தற்போதய தேசிய மக்கள் சக்தி பாரா ளுமன்ற உறுப்பினர்களில் 159, பேரும் அறிவாளி என தம்மை கூறினாலும் அவர்களுக்கு அனுபவ முதிர்ச்சி இல்லை என்பதே உண்மை அதில் தமிழ் உறுப்பினர்களாக 13, பேர் உள்ளனர்

உறுப்பினர்கள்:

யாழ்ப்பாணம் மாவட்டம்

  1. கருணானந்தன் இளங்குமாரன்
  2. சண்முகநாதன் ஶ்ரீபவானந்தராஜன்
  3. ஜெயசந்திரமூர்த்தி ரஜீவன்

வன்னி மாவட்டம்

  1. செல்வராசா திலகேஷ்வரன்
  2. மயில்வாகனம் ஜெகதீஷ்வரன்

மட்டக்களப்பு மாவட்டம்

  1. கந்தசாமி பிரபு

திருகோணமலை மாவட்டம்

  1. அருண் கேமச்சந்திரன்

பதுளை மாவட்டம். 

  1. கிட்ணன் செல்வராசா
  2. அம்பிகை சாமுவேல்

மாத்தளை மாவட்டம்

  1. சரோஜா போல்ராஜ்

நுவரேலியா மாவட்டம்

  1. கிட்ணன் கலைச்செல்வி

இரத்தினபுரி மாவட்டம்

  1. எஷ் பிரதீவ்

தேசியப்பட்டியல்

  1. இராமலிங்கம் சந்திரசேகரம்

இந்த 13, பேரும் இனப்பிரச்சினை  தொடர் பாகவும், அரசியல் தீர்வு தொடர்பாகவும் எந்தளவில் அரசாங்கத்துக்கு அழுத்தம் கொடுப்பார்கள் வெறும் தலையாட்டிகளாகவே இருப்பார்கள் என்பதால் ஏனைய தமிழ் உறுப்பினர்கள் வடகிழக்கில் தெரிவான தமிழ்தேசிய கட்சிகளை சேர்ந்த இலங்கைத்தமிழ் அரசுக்கட்சி.

  1. சிவஞானம் சிறிதரன்
  2. துரைராசா ரவிகரன்
  3. சண்முகம் குகதாசன்
  4. .ஞானமுத்து ஶ்ரீநேசன்.
  5. இரா சாணக்கியன்
  6. இளையதம்பி ஶ்ரீநாத்

7.கவீந்திரன் கோடீஷ்வரன்

 8.பத்மநாதன் சத்தியலிங்கம்.

அகில இலங்கை தமிழ் காங்கிரஸ்

9.கஜேந்திரகுமார் பொன்னம்பலம்

தமிழீழ விடுதலை இயக்கம்

10.செல்வம் அடைக்கலநாதன்-

சுயேட்சைக் குழு

11.இராமநாதன் அர்சுனா பதின் மூன்று பேரும் உறுதியாகவும் ஒற்றுமையாகவும் செயல்பட்டால் மட்டுமே வடகிழக் கில் மீண்டும் தமிழ்தேசியம் எழுச்சிபெறும் இல்லையேல் எதிர்காலம் இன்னும் பின்னடைவு களை சந்திக்கும்.

இதேவேளை இந்தியாவுக்கு மூன்று நாள் பயணத்தை முடித்து நாடு திரும்பிய ஜனாதிபதி அநுரா பாராளுமன்றத்தில் உரையாற்றுகையில் நாட்டை காட்டிக்கொடுக்கவில்லை என கூறி நாட்டுக்காக அவர் மேற்கொண்ட விடயங்களை மட்டுமே கூறினார்.

இந்தியப்பிரதமர் மாகாணசபை தொடர்பாக இனப்பிரச்சினை தொடர்பாக பேசிய விடயங்கள் எதையும் பாராளுமன்றத்தில் ஜனாதிபதி கூறவில்லை.

அக்கிராசன உரையாக இருக்கலாம், பாராளுமன்ற உரையாக இருக்கலாம் ஜனாதிபதி இனப்பிரச்சினை தொடர்பாக பாராளுமன்றத்தில் வாய்திறப்பதை தவிர்த்து வருகிறார் என்பதே உண்மை.

இனி அடுத்த பயணமாக சீனாவுக்கு செல்லவுள்ளார் எங்கு சென்றாலும் அபிவிருத்தி தொடர்பாக கரிசனையில் உள்ளாரே அன்றி 75, வருடங்களாக புரையோடிப்போன இனப்பிரச்சினைக்கு நிரந்தர அரசியல் தீர்வு வழங்கினால் மட்டுமே நாடு நன்மையடையும் என்பதைஉணர மறுக்கும் ஒருவராகவே இவரையும் பார்கலாம்.