அநீதிகளை சர்வதேசத்திற்கு கொண்டு செல்வதற்கு ஒரே வழி ‘தமிழ்ப் பொதுவேட்பாளர்’ : அருட்தந்தை ஜோச்மேரி

இந்த நாட்டில் தமிழர்கள் அழிவுப்பாதைக்கு கொண்டு செல்லப்படுகின்றார்கள்.இந்த நாட்டில் தமிழ் மக்களுக்கு நடந்த அநீதிகளை சர்வதேசத்திற்கு கொண்டு செல்வதற்கு இன்று எமக்குள்ள ஒரே வழி பொதுவேட்பாளராகும்.வேறு யாருக்கும் வாக்களிப்பதன் மூலம் அதனை அடையமுடியாது என மட்டக்களப்பு மாவட்ட ஜேசு சபை  அருட்தந்தை ஜோச்மேரி தெரிவித்தார்.

மட்டக்களப்பில் நடைபெற்ற நிகழ்வில் கருத்து தெரிவிக்கும்போதே அவர் இதனை தெரிவித்தார்.

‘இந்த நாட்டில் தமிழர்கள் அழிக்கப்பட்டுவருகின்றார்கள்.இதனை வெளியுலகுக்கு கொண்டுசெல்லவேண்டும். நாங்கள் சிங்கள வேட்பாளர்களுக்கு வாக்களிப்பதனால் எமது பிரச்சினையை கொண்டுசெல்லமுடியாது. அதனால் பொதுவேட்பாளராக அரியநேத்திரன் நிறுத்தப்பட்டுள்ளார்.இது நல்ல சந்தர்ப்பம்.இதனை நாங்கள் பயன்படுத்திக்கொள்ளவேண்டும்’ என்றார்.