அதிகரிக்கும் பெண்களுக்கு எதிரான வன்முறை: யாழில் கவனயீர்ப்புப் போராட்டம்!

”பெண்களுக்கு எதிரான அனைத்துச் சுரண்டல்களையும் முடிவுக்கு கொண்டுவர மௌனத்தை கலைப்போம்” எனும் தொனிப் பொருளில் யாழில் கவனயீர்ப்பு போராட்டமொன்று இன்று முன்னெடுக்கப்பட்டது.

வல்லமை சமூக மாற்றத்திற்கான போராட்ட இயக்கத்தினால், பௌர்ணமி நாள் செயற்பாட்டுத் தொடர்ச்சியாகக்  குறித்த போராட்டம் இன்று  முன்னெடுக்கப்பட்டது.

அந்தவகையில் யாழ் மத்திய பேருந்து நிலையம் முன்பாக ஆரம்பிக்கப்பட்ட குறித்த  கவனயீர்ப்புப் போராட்ட பேரணியானது தந்தை செல்வா கலையரங்கு வரை சென்று மகஜர் கையளிப்புடன் நிறைவடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.