அதிகரிக்கும் கொரோனா-2-deoxy-D-glucose (2-DG) தடுப்பு மருந்தை பயன்படுத்த இந்திய அரசு ஒப்புதல்

இந்திய அரசின் பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சி அமைப்பு (DRDO) தயாரித்துள்ள கொரோனா வைரஸ் மருந்து ஒன்றை அவசரகால தேவைக்கு பயன்படுத்த இந்திய தலைமை மருந்து கட்டுப்பாட்டாளர் (டிசிஜிஐ) அலுவலகம் ஒப்புதல் அளித்துள்ளது.

2-டியாக்சி- டி-குளுக்கோஸ் (2-deoxy-D-glucose (2-DG)) எனப்படும் இந்த மருந்தை பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சி அமைப்பின் ஓர் ஆய்வகமான இன்ஸ்டிடியூட் ஒஃப் நியூக்ளியர் மெடிசின் அண்ட் சயின்ஸ் (INMAS-DRDO), ஹைதராபாத்தில் உள்ள டாக்டர் ரெட்டிஸ் லெபோரட்டரீஸ் நிறுவனத்துடன் இணைந்து உருவாக்கியுள்ளது.

மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் கோவிட்-19 தொற்றாளர்களுக்கு செலுத்தி மேற்கொள்ளப்பட்ட சோதனைகளில், இந்த மருந்தில் உள்ள 2-DG மூலக்கூறு, அவர்கள் விரைவில் குணமடையவும் செயற்கை ஆக்சிஜன் தேவையை குறைக்கவும் பயன்படுகிறது என்று கண்டறியப்பட்டுள்ளது.

இதையடுத்து குறித்த மருந்து அவசரகால தேவைக்கு பயன்படுத்த இந்திய தலைமை மருந்து கட்டுப்பாட்டாளர் (டிசிஜிஐ) அலுவலகம் ஒப்புதல் அளித்துள்ளது.