இந்தியாவின் அதானி குழுமத்தின் காற்றாலை மின்திட்டத்தை இரத்துச்செய்வதற்கு அரசாங்கம் தீர்மானிக்கவில்லை என வெளிவிவகார அமைச்சர் விஜிதஹேரத் தெரிவித்துள்ளார்.
இந்திய நிறுவனத்தினால் வழங்கப்படும் கட்டணங்கள் விகிதங்கள் மிக அதிகம் என்றே தெரிவித்துள்ளதாக அமைச்சர் தெரிவித்துள்ளார்.
இந்தியாவிற்கான சமீபத்தைய விஜயத்தின்போது இது குறித்து ஜனாதிபதி ஆராய்ந்தார் அவர் இலங்கையின் கரிசனைகளை வெளியிட்டார் என வெளிவிவகார அமைச்சர் தெரிவித்துள்ளார்.
இது குறித்து பேச்சுவார்த்தைகளிற்கு தயார் என இந்திய அதிகாரிகள் தெரிவித்தனர் என அமைச்சர் தெரிவித்துள்ளார்.