Tamil News
Home செய்திகள் “அண்ணாவின் இறப்பிற்கு நீதியைப் பெற்றுத் தாருங்கள்” – சகோதரி உருக்கம்

“அண்ணாவின் இறப்பிற்கு நீதியைப் பெற்றுத் தாருங்கள்” – சகோதரி உருக்கம்

கடந்த புதன்கிழமை  காவல்துறையினரால் கைது செய்யப்பட்டு மரணமடைந்த  சந்திரன் விதுஷன் (21 வயது)  என்பவரை  “காவல்துறையினர் என்  கண் முன்னே அடித்துக் கொன்றனர்” என இளைஞனின் தங்கை தெரிவித்துள்ளார்.

சகோதரனின் இறப்பிற்கான காரணம் குறித்து ஊடகங்களுக்கு தெரிவித்த போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். எனது அண்ணனுக்கு நீதி கிடைக்க வேண்டும் அதுவரைக்கும் நான் சும்மா விடமாட்டேன். என் அண்ணனை  தூக்கி போட்டு குத்தினார்கள் சுவரில் சாற்றி அடித்தார்கள். சுவர் உடைந்து போய் இருக்கு’இவர்க்ளுக்கு யார் அதிகாரம் கொடுத்தது, மருத்துவ உடல் கூற்று அறிக்கையில்,  எனக்கு சந்தேகம் உள்ளது எனவே அதற்கான சரியான நீதி கிடைக்க வேண்டும். கைவிலங்கிட்ட எனது அண்ணன் ஐஸ்  போதைப் பொருட்களை எவ்வாறு விழுங்குவான் இவர்கள் அனைத்தையும் மூடி மறைக்க பார்க்கின்றனர். உண்மை ஜெயிக்க வேண்டும்  என அவர் கண்ணீர் மல்க  ஊடகங்களிடம் தெரிவித்துள்ளார்.

எனினும் ஜஸ் போதைப் பொருளுடன் கைது செய்யப்ட இளைஞன் 4 ஜஸ் போதைப் பொருள் பைகளை வாயில் போட்டு விழுங்கியதன் காரணமாக உயிரிழந்துள்ளார் என பிரேத பரிசோதனையில் தெரிய வந்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில் உயிரிழந்தவரின் சடலத்தை நீதவான் பார்வையிட்டு பிரேத பரிசோதனைக்கு உத்தரவிட்டார். அதேவேளை வாழைச்சேனை காவல்துறை பிராந்திய காவல்துறை அத்தியட்சகர் ஜெயந்த தலைமையில் விசேட காவல்துறை குழு அமைக்கப்பட்டு விசாணையிடம் பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Exit mobile version