394 Views
எதிர்வரும் மூன்றரை வருட காலத்துக்கு மக்கள் கொரோனா வைரஸுடன் வாழ்வதற்குப் பழகிக்கொள்ள வேண்டும் என சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சி தெரிவித்துள்ளார்.
பாராளுமன்றத்தில் நேற்று உரையாற்றுகையிலேயே அவர் இதனைக் கூறினார். இலங்கையில் சில காலத்துக்கு வைரஸ் காணப்படும் என்பதால் அதனை எதிர்கொள்வதற்கான தனது அணுகுமுறையை இலங்கை மாற்றும் என்றும் அவர் குறிப்பிட்டார்.
சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகமாகப் பணியாற்றிய அனில் ஜெயசிங்கவையும் சுகாதார அமைச்சின் பேச்சாளராக பணியாற்றிய வைத்தியர் ஜெயருவன் பண்டாரவையும் தான் பதவி நீக்கினார் எனக் கூறப்படுவதை நிராகரிப்பதாகவும் அவர் சபையில் குறிப்பிட்டார்.