அச்சமளிக்கும் வகையில் பரவும் கொரோனா – நேற்று 2,672 பேருக்குத் தொற்றியது

இலங்கையில் நேற்று 2 ஆயிரத்து 672 கொரோனா வைரஸ் தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர் என்று இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்தார்.

இது இலங்கையில் ஒரே நாளில் பதிவான அதிகூடிய கொரோனாத் தொற்றாளர்கள் எண்ணிக்கை ஆகும். அதற்கமைய, நாட்டில் கொரோனாத் தொற்றுக்கு உள்ளானவர்களின் மொத்த எண்ணிக்கை ஒரு இலட்சத்து 25 ஆயிரத்து 906 ஆக அதிகரித்துள்ளது.

இதனிடையே கொரோனாத் தொற்றுக்குள்ளான 20 ஆயிரத்து 657 பேர் வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். 20 ஆயிரத்துக்கும் மேற்பட்ட கொரோனா நோயாளிகள் நாட்டில் சிகிச்சை பெற்று வரும் முதலாவது சந்தர்ப்பம் இதுவாகும்.

இதேவேளை, இலங்கையில் கொரோனாத் தொற்றுக்குள்ளான 1,365 பேர் நேற்று குணமடைந்துள்ளதையடுத்து வீடு திரும்பியவர்களின் மொத்த எண்ணிக்கையும் ஒரு இலட்சத்து 4 ஆயிரத்து 463 ஆக உயர்வடைந்துள்ளது.