அகதித் தஞ்ச விண்ணப்ப விவகாரம் -சிறீலங்கா தொடர்பான அறிக்கைகளை நிராகரிக்க கோரிக்கை

188 Views

இலங்கைத் தமிழ் மக்களின் அகதித் தஞ்ச விண்ணப்பங்களைப் பரிசீலனை செய்யும் போது சிறீலங்கா தொடர்பான அறிக்கைகளை நிராகரியுங்கள் என  மனித உரிமை அமைப்புகள் கோரிக்கை விடுத்துள்ளன.

இலங்கைத் தமிழ் மக்கள் முன்வைக்கும் அகதித் தஞ்சக் கோரிக்கையைப் பரிசீலனை செய்யும் விடயத்தில் ஐக்கிய இராச்சியம் மற்றும் அவுஸ்திரேலியா ஆகிய நாடுகள் முன்வைக்கும் இலங்கை நிலவரம் தொடர்பான அறிக்கைகள் ஏற்றுக்கொள்ளப்பட முடியாதவை என்று குடியுரிமை தொடர்பாக ஐக்கிய இராச்சியத்தில் தொடுக்கப்பட்ட வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த வழக்கொன்றில் மேல் நீதிமன்ற நீதிபதிகள் மூவர் தீர்ப்பு வழங்கியிருக்கிறார்கள்.

Leave a Reply