செஞ்சோலை படுகொலை நினைவேந்தலை நடாத்தினால் கைது செய்ய படுவீர்கள்;சிறிலங்கா காவல்துறை அடாவடி

186
14 Views

செஞ்சோலை படுகொலையின் 14 ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு நாளை நடைபெறவுள்ள நிலையில் அந்த நிகழ்வுகளை நடாத்த முடியாது என புதுக்குடியிருப்பு சிறிலங்கா காவல்துறைனர் தடை விதித்துள்ளனர்.

முல்லைத்தீவு வள்ளிபுனம் பகுதியில் அமைந்திருந்த செஞ்சோலை சிறுவர் இல்லத்தின் மீது 2006 ஆவணி 14 அன்று இலங்கை விமான படையினர் நடாத்திய தாக்குதலில் 54 மாணவிகள் உட்பட 61 பேர் படுகொலை செய்யபட்டதின் நினைவேந்தல் நிகழ்வுகள் வருடந்தோறும் வள்ளிபுனம் இடைக்கட்டு சந்தியில் நினைவேந்தல் குழுவால் நடத்தப்படுவது வழமை.

இவ்வருடம் நாளை காலை நினைவேந்தல் நிகழ்வுகள் நடாத்த ஏற்பாடுகள் முன்னெடுக்கபட்டு வந்த நிலையில் ஏற்பாட்டாளர்களை நேற்று (12.08.2020)பொலிஸ் நிலையத்துக்கு அழைத்த புதுக்குடியிருப்பு காவல்துறைனர் நினைவேந்தல் நிகழ்வுகளை நடாத்த முடியாது எனவும் அவ்வாறு நடாத்தினால் கைது செய்ய படுவீர்கள் எனவும் எச்சரிக்கை விடுத்துள்ளனர். என நிகழ்வின் ஏற்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here