அன்று ஏன் தமிழீழத்தை முன்வைத்தார்கள்? இன்று ஏன் தமிழீழத்தை கைவிட்டார்கள்?

1949 ஆண்டு முதல் தனது தமிழரசுக்கட்சிதான் சமஸ்டிக்காக குரல் கொடுத்து வருவதாக சுமந்திரன் கூறிவருகிறார்.அதுமட்டுமல்ல இப்போது தமிழீழத்தை முன்வைக்க யாருக்காவது தைரியம் இருக்கிறதா எனவும் கிண்டலாக கேட்கிறார்.
சுமந்திரனுக்கு வரலாறு தெரியவில்லையா அல்லது தெரிந்தே வேண்டுமென்று வரலாற்றை திரிக்கிறாரா என்று புரியவில்லை.

தமிழரசுக்கட்சி தலைவர் அமிர்தலிங்கமும் காங்கிரஸ் தலைவர் சிவசிதம்பரமும் சேர்ந்து தமிழர் விடுதலைக் கூட்டணி பெயரால் தமிழீழத்தை முன்வைத்தார்கள்.
1977ல் இந்த தமிழீழ தீர்வுக்கு தமிழ் மக்களின் ஆதரவையும் ஆணையையும் இவர்கள் பெற்றார்கள்.

உண்மையில் இந்த தமிழீழ தீர்வை முதன் முதலில் முன்வைத்தவர் பலரும் நினைப்பதுபோல் அமிர்தலிங்கம் இல்லை. சுயாட்சிக் கழக நவரட்ணம் அவர்களே இதனை முதன் முதலில் முன்வைத்தவர்.ஆனால் சுயாட்சிக்கழக நவரட்ணம் அவர்கள் இதனை முன்வைத்தபோது இது தற்கொலைக்கு ஒப்பான தீர்வு என்றுதான் அமிர்தலிங்கம் கூறினார்.

ஆனால் இதே அமிர்தலிங்கம் பின்னர் தானே தமிழீழ தீர்வை முன்வைத்தார்.
அமிர்தலிங்கம் முன்வைத்த இந்த தமிழீழத் தீர்வை அடைவதற்காகவே தமிழ் இளைஞர்கள் ஆயுதப் போராட்டத்தை ஆரம்பித்தார்கள்.

எனவே அன்று ஏன் தமிழீழத்தை முன்வைத்தார்கள்? இன்று ஏன் தமிழீழத்தை கைவிட்டார்கள்? என்பது குறித்து பதில் அளிக்க வேண்டிய கடமை சுமந்திரனுக்கும் அவரது தமிழரசுக் கட்சிக்குமே உள்ளது.

ஆனால் அவரோ “இன்று தமிழீழத்தை முன்வைக்க யாருக்காவது தைரியம் இருக்கா?” என்று நக்லாக கேட்கிறார்.

தமிழீழத்திற்காக மரணித்த பல்லாயிரம் மாவீரர்களையும் மக்களையும் சுமந்திரன் ஒருவரால்தான் இவ்வாறு இத்தனை பகிரங்கமாக கிண்டல் செய்ய முடியும்.

நன்றி–  Tholar Balan