வணங்காமண் பறிபோவதற்கு நல்லாட்சியில் வழிவகுத்தவர்கள் யார்? அதிர்ச்சியான ஆதாரங்களுடன்…

வன்னி மண் களீபரம் செய்யப்படுகிறது. இது ஆண்டாண்டு நாம் பேசிக் கொள்ளும் விடயம் தான். ஆனால் நல்லாட்சி என அமைந்து, மைத்திரி மற்றும் ரணிலின் கீழ் 2015 முதல் வன்னி மண் எவ்வாறு திட்டமிட்டு குறிவைக்கப்பட்டது என்பது குறித்தும், அதற்கு நம் ஆமா சாமிகள் எவ்வாறு துணை போனார்கள் என்பது குறித்தும் பார்ப்போம். தேர்தல் காலத்திலும், தேர்தலுக்கு பின்னரும்இ இதற்கான பதில்கள் கண்டறியப்படவில்லையானால் வன்னி மண் முழுமையாக பறிபோவதை யாரும் தடுத்துவிடமுடியாது.

2015இல் தமிழர்கள் சனாதிபதியாக பதவியில் அமர்த்திய எனப் பெருமைப்பட்டுக் கொண்ட மைத்திரி, பாதுகாப்பு அமைச்சையும், மகாவலி அபிவிருத்தி அமைச்சையும் தன்னகப்படுத்திக் கொண்டார். மகாவலி அபிவிருத்தி அவரின் பொலநறுவை மாவட்டத்தை மையப்படுத்தி வருவதால், அதில் அதீத கவனம் எடுத்து, 2009 போர் முடிவிற்கு பின்னர் அது குறித்த நடவடிக்கைகளை மீண்டும் சனாதிபதியாக துரிதப்படுத்த ஆரம்பித்தார் மைத்திரி. விளைவு மகாவலி அபிவிருத்திக்கென அதிகரித்த தொகை வரவு செலவுத் திட்டங்களில் ஓதுக்கப்படத் தொடங்கின.

தயவுசெய்து இது குறித்து எங்கள் வேட்பாளர்களிடம் யாரும் கேட்டுவிடாதீர்கள். ஏனென்றால் 2015இல் இருந்து 2019 வரை வரவு செலவுத்திட்டத்தில் மைத்திரியின் கீழ் மகாவலி அபிவிருத்திக்கென 2016 நிதியாண்டில் 6541 கோடியும்இ 2017 நிதியாண்டில் 5421 கோடியும்இ 2018 நிதியாண்டில் 4220 கோடியும்இ 2019 நிதியாண்டில் 3980 கோடியும் ஒதுக்கப்படுவதற்குஇ நம்மவர்கள் ஆண்டாண்டு தவறாது எவ்வித கேள்வியுமின்றி வாக்களித்தார்கள்.

நம்மவர்கள் வாக்களிக்காவிட்டாலும்இ வரவு செலவுத்திட்டம் ஏற்றுக் கொள்ளப்பட்டிருக்கும் என்பது வேறுவிடயம்.முடிந்தால் நம் மக்களின் புனர்வாழ்விற்கு, புனர்நிர்மாணத்திற்குஇ தொழில் வாய்பிற்குஇ தொழிற்த்துறைப் பயிற்சிக்குஇ என்ன பணத்தை வரவு செலவுத் திட்டத்தில் இருந்து பெற்றுக் கொண்டார்கள் எனக் கேட்டுப் பாருங்கள்.

ஏதாவது பெற்றிருந்தால் அதில் என்ன செய்தார்கள் எனவும் கேட்டுப்பாருங்கள்? இன்றைய மகாவலி எல் வலய விஸ்தரிப்பு முதல், விரைந்த அத்துமீறிய சிங்களக் குடியேற்றங்கள் எல்லாம், 2016 முதல் 2019 வரையிலான நான்கு வரவு செலவுத் திட்டங்களில் ஒதுக்கப்பட்ட 20 ஆயிரத்து 162 கோடி ரூபாய்களில் அமைந்தது தான் என்பதாவது அவர்களுக்குத் தெரியுமா? எனவும் கேட்டுப் பாருங்கள்.

இப்போது மட்டும் வன்னிமண் பறிபோகிறது அதைத் தடுக்க எங்களுக்கு வாக்களியுங்கள் எனப் புலம்புவதில் என்ன பயன்? ஆனால் அடுத்து பார்க்க இருப்பது இதைவிட அதிர்ச்சிகரமான விடயம். மைத்திரி பாதுகாப்பு அமைச்சையும் வேறு கையப்படுத்தியிருந்தார் என்றிருந்தேன். அதன் கீழ் போர் காலத்தில் மோசமான குற்றவாளிகளை உள்வாங்கி உருவாக்கப்பட்டிருந்த 41 ஆயிரம் எண்ணிக்கை கொண்ட சிங்கள ஊர்காவல்படை சிவில் பாதுகாப்பு என்ற போர்வையில் தொடர்ந்தும் தக்கவைக்கப்படிட்டிருந்தனர். முதலில் வீட்டுக்கு அனுப்பப்பட்டிருக் வேண்டியவர்கள் இவர்கள்.

அவர்களை நிரந்தரமாக நிறுவனப்படுத்தும் முயற்சியை மைத்திரி முடுக்கிவிட்டார். அதற்கென தனியான தொகை வரவு செலவுத் திட்டத்தில் ஒதுக்கப்பட்டது. 2016 நிதியாண்டு வரவு செலவுத்திட்டத்தில் 1750 கோடியும்இ 2017 நிதியாண்டில் 1695 கோடியும்இ 2018 நிதியாண்டில் 1758 கோடியும், 2019 நிதியாண்டில் 1861 கோடியும், சிங்கள ஊர்காவல் படைகளை நிறுவனமயப்படுத்துவதற்கு ஒதுக்கப்பட்டது. ஆம் நான்கு ஆண்டுகளில் சிங்கள ஊர்காவல் படைகளுக்கு ஒதுக்கப்பட்ட தொகை 7064 கோடி.

2016 இல் இவர்கள் நிரந்தர கட்டமைப்பாக மைத்திரியால் அறிவிக்கப்பட்டார்கள். இவர்களுகென தனியான கட்டளைத் தலைமையகங்கள் கிளிநொச்சி, முல்லைத்தீவு, வவுனியா எனவும் அமைந்தன. பொலநறுவையின் கபரத்தனையில் இவர்களுக்கான தலைமையகக் கட்டிடத்திற்கான அடிக்கல்லை மைத்திரி நாட்டி, அதை விரைவில் கட்டிமுடித்து அவர்களிடம் கையளித்தார். இதன் தொடர்ச்சியாக அனைவருக்கும் நிரந்தர தொழில் கடிதங்கள் வழங்கப்பட்டது மட்டுமன்றி அரச ஓய்வு ஊதியத் திட்டத்திலும் இவர்கள் மைத்திரியால் இணைத்து விடப்பட்டனர்.

மகாவலியின் கீழ் மட்டக்களப்பு மாவட்டத்தை களீபரம் செய்ய முன்னெடுக்கப்பட்ட மகா ஓயா திட்டம் மற்றும் மணலாற்றை களீபரம் செய்ய உருவாக்கப்பட்ட வெலி ஓயா திட்டங்களில் இவர்களுக்கு பெரும் பங்கு வழங்கப்படடது. இதன் தொடர்ச்சியாக வன்னி பெருநிலப்பரப்பெங்கும் காவல் என்ற போர்வையில் பணிக்கு அமாத்தி, தொழில் நிறுவனங்கள் என்ற போர்வையில் வன்னி வளத்தை சுரண்ட அனுமதித்து, வன்னி சிறுவர் பள்ளிகளை இவர்கள் பராமரிப்பின் கீழ் கொண்டுவந்துஇ வன்னி பெருநிலப்பரபெங்கும் பயிர்செய்கை மேற்கொண்டு, அதில் தமிழர்களை அடிமைகளாக பணியில் அமர்த்தி பிழிந்தெடுக்க, என பல அவலங்கள் அரங்கேற துணை போயிருக்கின்றனர் எங்கள் மக்கள் பிரதிநிதிகள்.

ஒரு ஊர்காவல் படைகள் விடயத்திலேயே இவ்வளவு சிதைவுகள் எண்டால், படைகள் விடயத்தில் பேசவே வேண்டுமா? மைத்திரி – ரணில் விடயத்திலேயே இவ்வளவு சொப்பல்கள்! கோத்தா – மகிந்தா விடயத்தில் என்னதான் செய்வார்கள் என்பதையும் கேட்டுவிடுங்கள்? வாய்கிழிய எங்கள் ராஜதந்திரம், சாணக்கியம் என்போரிடம் இதுவா ராஜதந்திரம்? இதுவா சாணக்கியம்? என்பதையும் தவறாது கேட்டுவிடுங்கள்? நாங்கள் இதை எல்லாம் நிவர்த்தி செய்துவிடுவோம்இ சிறப்பாக செயற்படுவோம் எனஇ வேறு யாரும் கூறினாலும் அவர்களிடமும் அது எவ்வாறு என்பதை தவறாது கேட்டுவிடுங்கள்.

மக்கள் சக்தி எப்போதுமே மாபெரும் சக்தி தான். ஆனால் மக்கள் விழிப்புடன் இருந்து கேள்விகளைக் கேட்டு சரியான விளக்கங்களை பெற்றால் தான் அந்த மாபெரும் சக்தி சாத்தியமாகும். இல்லையேல் மக்கள் நலன்களை புறந்தள்ளியஇ மக்களை மாக்களாக்கி அரசியல்வாதிகள் எப்போதும் ஏமாற்றும் களவாணிகளாகவே இருந்துவிடுவார்கள்.

நன்றி