Home செய்திகள் தொல்லியல் திணைக்களத்தின் தடைகளைத் தாண்டி திருவிழா காணும் வெடுக்குநாறி மலை ஆதிலிங்கேஸ்வரர்

தொல்லியல் திணைக்களத்தின் தடைகளைத் தாண்டி திருவிழா காணும் வெடுக்குநாறி மலை ஆதிலிங்கேஸ்வரர்

மூன்று வருடங்களுக்கு மேலாக தொல்லியல் திணைக்களமும் பொலிஸாரும்  இணைந்து வெடுக்குநாறி மலை ஆதிலிங்கேஸ்வரர் ஆலயத்தினுடைய நிர்வாகத்திற்கு எதிராக, தொடர்ச்சியாக அழுத்தத்தைக் கொடுத்து வவுனியா மாவட்ட நீதிமன்றத்தில் வழக்குப் பதிவு செய்தனர்.

இந்த வழக்குத் தொடர்ச்சியாக நடைபெற்று வரும் சந்தர்ப்பத்தில், நாளை இந்த ஆலயத்தில் நடைபெற இருக்கின்ற திருவிழாவினை தடைசெய்யும் நோக்கில் வவுனியா மாவட்ட நீதவான் நீதி மன்றத்தில்,நேற்றைய தினம் புதிதாக ஒரு வழக்கொன்றை பொலிஸார் பதிவு செய்திருந்தார்கள்.

இந்த வழக்கு தொடர்பாக இன்றைய தினம் ஆலய நிர்வாகத்தினர் நீதி மன்றத்தில் முன்னிலையாகி இருந்தனர்.

வெடுக்குநாரி ஆலய ஏணிப்படி விவகாரம் தொடர்பில் ஆலய நிர்வாகத்திற்கு பிணை - Crime News - தமிழ் செய்திகள்

இந்நிலையில், ஆலய நிர்வாகத்தினர் சார்பில் ஜனாதிபதி சட்டத்தரணி சிற்றம்பலம் உட்பட 17க்கும் மேற்பட்ட சட்டத்தரணிகள் இன்று மன்றிலே முன்னிலையாகி பொலிஸாரால் கொண்டுவரப்பட்ட தடை உத்தரவை நீக்கி திருவிழாவை சுதந்திரமாக மேற்கொள்ளலாம், எந்த சிக்கலும் இல்லை என்றவொரு கூற்றை  முன்வைத்திருந்தனர்.

இந்நிலையில், திட்டமிட்டபடி திருவிழா நடைபெறும் என்றும் எனவே எந்த வித அச்சமும் இன்றி அடியவர்கள் ஆலயத்திற்கு வரலாம் என்றும் ஆலய நிர்வாகத்தினர் அறிவித்துள்ளர்.

Exit mobile version