இலங்கையில் ஏற்பட்டுவரும் மாற்றம் கவலை தருகின்றது – ஐ.நா

நடைபெறவுள்ள பொதுத்தேர்தலுக்கு முன்னர் இலங்கையில் காணப்படும் நிலமை குறித்து ஐக்கிய நாடுகள் சபையின் சிறப்பு அறிக்கையாளர் கிளெமென்ட என் வுயுல் கவலை தெரிவித்துள்ளார்.

இலங்கைக்கான தனது பயணம் தொடர்பில் ஐ.நா மனித உரிமைகள் ஆணைக்குழுவிற்கு அவர் வழங்கிய அறிக்கையில் அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது:

இலங்கையில் சுதந்திரமாக ஒன்றுகூடுவதற்குரிய நிலமைகள் காணப்படவில்லை. நான் ஒரு வருடத்திற்கு முன்னர் அங்கு சென்றதற்கும், தற்போது சென்றதற்கும் பல வேறுபாடுகள் உள்ளன. அங்கு நிலமை மோமடைந்து வருகின்றது.

முன்னர் அரச சார்பற்ற அமைப்புக்களின் செயலகம் பாதுகாப்பு அமைச்சின் கட்டுப்பாட்டின் கீழ் இருந்து வேறு அமைச்சிற்கு மாற்றப்பட்டிருந்தது. ஆனால் அது அரச தலைவர் தேர்தலின் பின்னர் மீண்டும் பாதுகாப்பு அமைச்சின் கட்டுப்பாட்டில் கொண்டுவரப்பட்டுள்ளது. இந்த அமைப்பில் பதிவு செய்யப்படாத அரச சார்பற்ற நிறுவனங்களை சட்டவிரோதமானவை என நாடாளுமன்றக் குழு ஒன்று தெரிவித்துள்ளது என அவர் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.