கட்சிக்காக மக்கள் அல்ல மக்களுக்காகவே கட்சி என்பதையே இந்த தேர்தல் எடுத்துக்காட்டியுள்ளது (குறு நேர்காணல்)

கோவிந்தன் கருணாகரம்(ஜனா) தமிழ் தேசிய கூட்டமைப்பின் பங்காளிக்கட்சியான தமிழீழ விடுதலை இயக்கத்தின் பொருளாளராக இவர் 2020 பாராளுமன்ற தேர்தலில் 26382 வாக்குகளைப்பெற்று மட்டக்களப்பு மாவட்டத்தில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் சார்பில் பாராளுமன்ற உறுப்பினராக தெரிவுசெய்யப்பட்டுள்ளார். எதிர்கால செயற்பாடுகள் தொடர்பாக இவரிடம் இலக்கு மேற்கொண்ட குறிகிய நேர்காணல்

 1.தாங்கள் முன்னுரிமை கொடுக்கவுள்ள செயற்த்திட்டங்கள் பற்றி கூறமுடியுமா கூறமுடியுமா?

உரிமை அரசியலை தொடர்ச்சியாக முன்னெடுத்த நாங்கள் இனிவரும் காலங்களில் அபிவிருத்தி அரசியலையும் உரிமை அரசியலையும் இணைத்து முன்கொண்டு செல்லவேண்டிய நிலையிருக்கின்றது.

முன்னாள் போராளிகள் உட்பட இளைஞர் யுவதிகளில் தொழில்வாய்ப்புகளை உறுதிப்படுத்த வேண்டும் , பகுதிகளை கட்டியெழுப்பவேண்டும் இவ்வாறு உரிமையுடன் கூடிய அபிவிருத்தியை முன்கொண்டுசெல்ல வேண்டும்.

2.இந்த தேர்தலில் மக்களின் தீரப்பை எவ்வாறு பார்க்கிறீர்கள்?

கட்சிக்காக மக்கள் அல்ல.மக்களுக்காகவே கட்சி என்பதையே இந்த தேர்தல் எடுத்துக்காட்டியுள்ளது.மக்களின் உணர்வுகளை புரிந்துகொண்டு அரசியல் நகர்வுகளை முன்னெடுக்கவேண்டும்.

3.உங்கள் வெற்றிக்கு அப்பால் உங்கள் கட்சியின் அடைவு பற்றி தங்கள் கருத்து என்ன?

தமிழ்தேசிய கூட்டமைப்பு பின்னடைவினைஎதிர்கொண்டுள்ளது.ஒற்றுமை,ஒன்றுபட்ட செயற்பாடு, மக்களின் உணர்வுகளை புறந்தள்ளிய செயற்பாடுகள் போன்றவை இந்த பின்னடைவுக்கு காரணம் நாம் உணர்ந்து கொள்ள முடியும்.

4.தங்களுக்கு கிடைத்த இந்த வாய்ப்பை தமிழரின் இருப்பை உறுதி செய்ய,அவர்களுக்கு இழைக்கப்பட்ட அநீதிகளுக்கு நியாயம் தேட எவ்வாறு பயன்படுத்தலாம் என நினைக்கிறீர்கள்?

தமிழர்கள் மீதான தமிழின படுகொலைக்கான நீதிப்பொறிமுறைக்கு நாம்  தொடர்ச்சியாக குரல்கொடுக்கவேண்டிய தேவையுள்ளது.சர்வதேச சமூகத்துடன் இணைந்து தமிழினம் மீது புரியப்பட்ட போர்க் குற்றத்திற்காகவும், தமிழின படுகொலைக்காகவும் நீதி வேண்டி  தொடர்ச்சியாக போராடுவோம்.அதேபோன்று இலங்கையில் தமிழர்களின் இருப்பினை உறுதிசெய்யும் வகையிலான செயற்பாடுகளை திட்டமிட்டு முன்னெடுப்போம்.