Home நிகழ்வுகள் தியாக தீபம் திலீபனை, உண்ணாவிரத மேடையில் சந்தித்த தந்தையார்!

தியாக தீபம் திலீபனை, உண்ணாவிரத மேடையில் சந்தித்த தந்தையார்!

தியாக தீபம் திலீபன் அவர்களின் உண்ணா விரத ஒழுங்குகளை உடனிருந்து கவனித்த ராஜன், 33 ஆண்டுகளின் முன் இன்றைய நாளை எம்முடன் நினைவு கூர்ந்தார்.

முதல் நாள் நினைவுகள்….

1987 செப்டம்பர் பதினந்தாம் திகதி காலை தலைவர் பிரபாகரனைச் சந்தித்து விட்டு காலை நல்லூரடி கந்தன் கருணை வீட்டில், பிரசாத், மாத்தையா அண்ணா, காசிஅண்ணா தேவர் அண்ணா,இரு நவீனன், எல்லோரும் சிறி அண்ணா வானில் நல்லூர் வீதியில் இறங்கி உண்ணாவிரத மேடைக்கு செல்வதற்கு முன் நெல்லிமரத்தின் கீழ் இந்திரன் அண்ணா வீட்டு வாசலடியில் எதிர்பாராத நிகழ்வாக ஒளவைப்பாட்டி போல் ஒரு பாட்டி, விபூதி பூசி சந்தணப் பொட்டு வைக்கிறா, அப்போது   எல்லோரும் பேசிக்கொண்டோம் ஏதோ நல்லது நடக்கப் போகின்றது என்று.

Tamil Diplomat Thileepan remembered in Jaffna - Tamil Diplomat

மாத்தையா அண்ணா தீலிபனை அழைத்து சென்று மேடையில் உள்ள கதிரையில் இருத்துகிறார். பிரசாத் தலைமையில் நின்ற சொற்ப மக்களிற்கு ஏன் உண்ணாவிரத போராட்டம் தீலிபன் ஆரம்பிக்கிறார் என்று பிரசாத் தலைமையுரை ஆற்றுகிறார்.

இந்த வேளையில் ஒன்றை குறிப்பிடவேண்டும்,  நாங்கள் பத்திரிகையாளரும்  கூட அழைப்பு விடுக்கவில்லை. அவர்கள் தகவலை கேள்விபட்டு நல்லூர் வீதிக்கு வந்து செய்திகளை யாழ் குடா உலகெங்கும் தெரிவித்தார்கள். சிறிது சிறிதாக மக்கள் அலை நல்லூர் வீதியை இரண்டாம் நாள் நிரப்பினார்கள்.

 15-9-1987 அன்று மிகுந்த உற்சாகத்துடன் தீலிபன் கதிரையில் அமர்ந்திருந்து பிரசாத்திடம் செய்யவேண்டடிய அரசியல் பணி பற்றி கலந்துரையாடுகிறார்.

2ம் நாள்…..

போராளி நண்பர்கள் ஒவ்வொரு வராக வந்து கலந்துரையாடி செல்கிறார்கள். மேடையில் மாலையிலேயே கவிதை, பாட்டு,பேச்சு என்றும் இடையில் ஒலிபெருக்கியில் விடுதலை கீதங்கள் நல்லூர்வீதியெங்கும் ஒலிபரப்பாகிக்கொண்டு இருந்தது. தீலிபனிற்கு மிகவும் பிடித்த “ஓ…மரணித்த வீரனே உன் சீருடைய எனக்கு தா” என்ற பாடல் ஒரு நாளைக்கு மூன்று வேளை ஒலிபெருக்கியில் போடப்பட்டது.

இந்த வேளையில் ஒலிபெருக்கி இயக்குனர்கள் மிகுந்த அர்ப்பணிப்புடன் அண்ணன் தம்பியாக ஒரு குடும்பமாக நின்று செயற்பட்டதையும், ஜெனரேட்டர் பூட்டி நல்லூர் வீதியெங்கும் ஒளி வெள்ளம் பாய்ச்சிய கோப்பாய் இந்திரன் அண்ணாவையும் நினைக்காமல் இருக்க முடியாது. தீலிபனின் இந்த தியாகப்பயணித்தில் தொடர்பாடல் வசதிகளற்ற காலத்தில் தாமாகவே முன்வந்து மக்கள் எழுச்சியை தூண்டியவர்களில் இவர்கள் பங்கு நினைவுகூரத்தக்கது.

அன்று மாலை தீலிபனின் தந்தை தன் மகன் உண்ணாவிரதம் இருக்கின்றார் என்று கேள்விப்பட்டு ஒரு வித பதட்டதுடன் வந்தார். கண்கள் கலங்கிய படி தந்தையினைக் கண்ட தீலிபன், சிறிய சிரிப்புடன் பார்த்தார். இருவரும் பார்வை மொழியும் மெளனமொழியுமாகவே பேசினார்கள்.பார்த்தார்கள் இந்த நிகழ்வுகளை பார்த்தது 33 ஆண்டுகள் ஆகினாலும் உயிருள்ளவரை மறக்கமுடியாத நினைவுகளாகவே உள்ளன…

Exit mobile version