சுமந்திரனின் பெயரை எதிர்வரும் ஐந்தாம் திகதிக்குப் பின்னர் உச்சரிக்க வேண்டிய இருக்காது

295
22 Views

தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் பாராளுமன்ற எம்.ஏ.சுமந்திரனின் பெயரை எதிர்வரும் ஐந்தாம் திகதிக்குப் பின்னர் உச்சரிக்க வேண்டிய தேவை மக்களுக்கு இருக்காது எனத் தெரிவித்துள்ள தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம், கூட்டமைப்பின் ஊடகப் பேச்சாளர் தகுதியை இழந்து வெறுமனே சட்ட ஆலோசகராகவே இருக்கின்றார். அவ்வாறான ஒருவருடன் நாம் விவாதிக்க வேண்டிய தேவையில்லை என்றும் குறிப்பிட்டார்.

யாழ்ப்பாணம் கொக்குவில் பகுதியில் அமைந்துள்ள அவரது கட்சி அலுவலகலத்தில் இடம் பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இதனைத் தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

யாழ்ப்பாணம் வீரசிங்கம் மண்டபத்தில் நேற்று முன்தினம் கட்சிகளுக்கு இடையிலான விவாதம் நடைபெறுவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இந்நிலையில் திடீரென இந்த நிகழ்ச்சி இரத்துச் செய்ய்பபட்டது. எமது கட்சியின் சார்பில் சட்ட ஆலோசகர்களான சுகாஸ் மற்றும் காண்டீபன் ஆகியோர் கலந்துகொள்ளவிருந்தனர். எனினும் நான் கலந்துகொள்ளவில்லை எனத் தெரிவித்து தாம் நிகழ்வுக்கு வரவில்லை என்று சுமந்திரன் கூறியதாக ஊடகங்கள் வாயிலாக அறிந்தேன்.

சுமந்திரன் முதலில் ஒன்றைப் புரிந்துகொள்ள வேண்டும். நான் ஒரு கட்சியின் தலைவராக இருக்கின்றேன். அப்படியாயின் இன்னொரு கட்சியின் தலைவருடனேயே நான் விவாதத்திற்கு செல்ல வேண்டும். அதனாலேயே எனது சட்ட ஆலோசகரை அந்த நிகழ்வுக்கு அனுப்பத் திட்டமிட்டேன். ஆனால் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் ஊடகப்பேச்சாளர் பதவியையும் இழந்து வெறுமனே சட்ட ஆலோசகராவே தற்போது செயற்பட்டு வருகின்ற சுமந்திரன் இவர்களுடன் விவாதம் செய்ய பயம் ஏற்பட்டதன் காரணமாக அவர் வரவில்லை.

சுமந்திரன் பொது வெளிகளில் குறிப்பிடுகின்ற கருத்துக்களை கட்சியின் கருத்தாக எடுக்க வேண்டாம் என கூட்டமைப்பின் தலைவரே கூறிவருகின்றார். அது மட்டுமல்லாது சுமந்திரனின் கருத்துக்களை கணக்கில் எடுக்கத்தேவை இல்லை என்று பல தடவை கூறிவருகின்றார். அப்படியாயின் கூட்டமைப்பு சுமந்திர வெறுமனே சட்ட ஆலோசகராகவே இருக்கின்றார்.

எதிர்வரும் ஐந்தாம் திகதி நடைபெறவுள்ள பொதுத்தேர்தலின் பின்னர் அவரது பெயரை உச்சரிக்கவேண்டிய தேவை இருக்காது அதனால் தான் எனது கட்சி உறுப்பினர்களுக்கும் சுமந்திரனின் பெயரை இனி உச்சரிக்கக்கூடாது என கூறிவைத்துள்ளேன் என்றார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here